×
 

பிரதமரை சந்தித்தார் சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக்!! நம்பகமான கூட்டாளி!! மோடி புகழாரம்!!

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து பேசினார்.

சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி இந்தியாவுக்கு 5 நாள் அரசு பயணமாக வந்துள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நேற்று டெல்லி வந்தடைந்த அவர், இன்று காலை ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு (SAGAR) சீஷெல்ஸ் அளித்து வரும் ஆதரவுக்கு ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கிடையேயான உறவு, சர்வதேச பிரச்சினைகள், பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை ஆலோசிக்கப்பட்டன. முக்கிய துறைகளில் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

பிரதமர் மோடி கூறியதாவது ; “140 கோடி இந்தியர்களின் சார்பாக சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினி மற்றும் அவரது குழுவினரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபராக அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். சீஷெல்ஸ் நாட்டின் 50வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், இந்தியா-சீஷெல்ஸ் தூதரக உறவுகளின் 50வது ஆண்டையும் நாம் நினைவுகூர்கிறோம்.

இதையும் படிங்க: குளுகுளுனு இருக்கப்போகுது சென்னை..!! பனிமூட்டம் தொடருமாம்..!! வானிலை அப்டேட்..!!

 

Addressing the joint press meet with President Dr. Patrick Herminie of the Republic of Seychelles.
https://t.co/gKZQcH960T

— Narendra Modi (@narendramodi) February 9, 2026

இந்தியப் பெருங்கடல் பல நூற்றாண்டுகளாக இரு நாட்டு மக்களை இணைத்துள்ளது. இதன் காரணமாக நம்பிக்கையின் பாரம்பரியம் வலுப்பெற்றுள்ளது. சீஷெல்ஸ் இந்தியாவின் கடல்சார் அண்டை நாடாகவும், நம்பகமான கூட்டாளியாகவும், இந்தியாவின் கடல்சார் தொலைநோக்கு (SAGAR) திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் விளங்குகிறது” என்று தெரிவித்தார்.

இந்தப் பயணத்தின் போது இருநாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பு, பொருளாதார முதலீடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டன. சீஷெல்ஸ் அதிபரின் இந்தப் பயணம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் மூலோபாய நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் நடந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு டெல்லியில் நடந்த இந்த உயர்மட்ட சந்திப்பு இருநாட்டு உறவுகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது. இந்தியாவின் SAGAR திட்டத்திற்கு சீஷெல்ஸ் தொடர்ந்து ஆதரவு அளிப்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்பதை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: சொன்னபடியே டாஸ்மாக்கை இழுத்து மூடி போராட்டம்..! 3 மணி நேரமாக காத்திருந்த மதுப்பிரியர்கள்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share