×
 

இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!

''வருத்தம் தெரிவிக்கும் அறிக்கைகள் மட்டும் போதாது. வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கை தேவை,'' என வங்கதேச இடைக்கால அரசுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் வலியுறுத்தி உள்ளார்.

புது டெல்லி: வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். வங்கதேச இடைக்கால அரசு வெறும் வருத்தம் தெரிவிக்கும் அறிக்கைகளுடன் நிற்காமல், வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டது மிகக் கொடூரமான சம்பவம். இது ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது. இத்தகைய வன்முறை சம்பவங்களுக்கு வெறும் வருத்தம் தெரிவிக்கும் அறிக்கைகள் மட்டும் போதாது. வன்முறையை கட்டுப்படுத்த உறுதியான கூடுதல் நடவடிக்கைகள் தேவை. 

தெருக்களில் வன்முறையை கட்டுப்படுத்துவது வங்கதேச அரசின் முதன்மையான கடமை. அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருக்கள் மீண்டும் அமைதியாகவும், மக்கள் பாதுகாப்பாக உணரும் வகையிலும் அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாக்., சீனா தலையீடு அதிகரிப்பு! இந்தியாவுக்கு சவாலாக மாறும் வங்கதேசம்! பார்லி., நிலைக்குழு வார்னிங்!

வங்கதேசத்தில் சமீப காலமாக ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தீபு சந்திர தாஸ் போராட்டக்காரர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலக அளவில் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் தங்க அனுமதித்த மத்திய அரசின் முடிவை சசி தரூர் ஆதரித்துள்ளார். "பல ஆண்டுகளாக இந்தியாவின் நல்ல நண்பராக இருந்த ஒருவரை வெளியேற்றாமல் இருப்பது சரியான மனிதாபிமான செயல். பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்படும் வரை ஷேக் ஹசீனா இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

வங்கதேசத்தில் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றன. சசி தரூரின் கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா நலனுக்காக சுயாட்சியை அடகுவைக்க முடியாது! ரஷ்ய அதிபர் புடினின் வருகை! சசி தரூர் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share