கேரளாவை கதிகலங்க வைக்கும் ஷிகெல்லா..! பதறும் மக்கள்... இதுவரை 6 பேர் பலி..!
கேரளாவில் ஷிகெல்லா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளா முழுவதும் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், மக்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத் துறை தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
மேலும் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், கோழிக்கோட்டில் 3 பேர், வயநாட்டில் 2 பேர், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 140 முதல் 150 வரை வழக்குகள் பதிவாகியுள்ளன. கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. குழந்தைகள் உட்பட பலர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷிகெல்லா என்பது Shigella என்ற பாக்டீரியா இனத்தால் ஏற்படும் மிகவும் தொற்று தன்மை கொண்ட குடல் தொற்று ஆகும். இது ஷிகெல்லோசிஸ் அல்லது பாக்டீரியல் டிஸென்டரி என்றும் அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!
இந்த பாக்டீரியா மிகக் குறைந்த அளவிலேயே தொற்றை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மலம்-வாய் வழி மூலம் பரவுகிறது. மாசுபட்ட உணவு, குடிநீர், அசுத்தமான கைகள், மேற்பரப்புகள் மூலம் எளிதில் பரவுகிறது. பள்ளிகள், கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்கள், சுகாதாரமற்ற சூழல்கள் ஆகியவை பரவலுக்கு உகந்தவை. அதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!