×
 

கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா வைரஸ்!! நோய் தொற்றால் அடுத்தடுத்து பாதிக்கப்படும் மாணவர்கள்! ஹை அலர்ட்!

கேரளாவில் ஷிகெல்லா நோய் தொற்றுக்கு 2 பள்ளி மாணவர்கள் ஆளாகி உள்ளனர். அதே பள்ளியில் மேலும் 25 மாணவர்களுக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் ஷிகெல்லா நோய் தொற்று மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து அதே பள்ளியில் பயிலும் மேலும் 25 மாணவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஷிகெல்லா என்பது ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயாகும். இது பெரும்பாலும் மாசுபட்ட உணவு மற்றும் குடிநீர் மூலம் பரவுகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், வயிற்றுவலி போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

சமீபத்தில் கோழிக்கோடு அருகே உள்ள அண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி ஒருவர் ஷிகெல்லா தொற்றால் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பல பகுதிகளில் சுகாதாரத் துறை கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது.

இதையும் படிங்க: அசைக்க முடியாத ஆதரவை தர தயார்!! வட கொரியாவுக்கு சீன அதிபர் ஜின்பிங் ப்ராமிஸ்!

இந்நிலையில், வயநாடு மாவட்டத்தின் சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு ஷிகெல்லா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உடல்நல பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்ட மேலும் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஷிகெல்லா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்த பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதார அமைச்சர் முரளிதரன் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர் என்றும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கேரளாவில் ஷிகெல்லா தொற்று தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் சுத்தமான குடிநீரை பயன்படுத்தவும், உணவு சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அப்பாச்சி ஹெலிகாப்டரை அடித்து வீழ்த்திய ஈரான்! அசூர பலத்துடன் மீண்டும் தாக்கும் அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share