×
 

இதோட விட்டுடாதீங்க.. தீவிரவாதிகளை வேரோடு பிடுங்கி எறியுங்கள்..! வினய் நர்வால் மனைவி ஆதங்கம்..!

ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் பேசியுள்ளார்.

திருமணமாகி ஐந்து நாட்களே ஆன நிலையில் தேன் நிலவுக்காக பகல்காமுக்கு சென்ற இளம் ஜோடிகள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான ஐந்து நாட்களில் கணவனை இழந்த ஷிமான்ஷி நர்வால் செய்வதறியாத தன் கணவனின் சடலத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் மனதை உலுக்கியது.

அதுமட்டுமில்லாத தன் கணவனின் இறுதி அஞ்சலியில் அவர் கதறி அழுது தன் கணவன் பற்றி பெருமையோடு பேசிய நிகழ்ச்சியான தருணங்களையும் நம்மால் மறக்க முடியாது. எப்படியாவது தன் கணவரின் இறப்புக்கு நீதி கிடைக்காத என்ற ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இதை நாங்கள் விரும்பவில்லை; அமைதி வேண்டும்.. ஹிமான்ஷி கருத்தால் பரபரப்பு!!

அப்போது, தீவிரவாத தாக்குதல் தொடர்பான தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தனது கணவரும் பாதுகாப்புப் படையில் இருந்தார் என்றும் அப்பாவி மக்களைக் காப்பதற்கும், அமைதியை நிலைநாட்டவும் அவர் விரும்பினார் எனவும் கூறினார். வெறுப்புணர்வும், பயங்கரவாதமும் நாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற விருப்பத்தோடு அவர் பணியாற்றியதாக குறிப்பிட்ட அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

ஆனால், இத்துடன் இதனை முடித்துக்கொள்ளக்கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைத்த அவர், நாட்டில் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டும் ஆரம்பமாக ஆபரேஷன் சிந்தூர் இருக்க வேண்டும் என பேசினார்.

இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல்: உயிரிழந்த கடற்படை அதிகாரி.. ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்த ஹரியானா அரசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share