உலகை உலுக்கிய எப்ஸ்டீன் பாலியல் வழக்கு!! அரசு குடும்பத்திற்கு சம்பந்தமா? பிரிட்டன் மன்னரின் சசோதரர் கைது?!
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு உள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரர் ஆண்ட் ரூ, 66, நேற்று கைது செய்யப்பட்டார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசின் தம்பி, மறைந்த ராணி எலிசபெத்தின் மகன் ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன்-வின்ட்சர் (முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ) நேற்று (பிப்ரவரி 19, 2026) கைது செய்யப்பட்டார். இது பிரிட்டன் வரலாற்றில் நவீன காலத்தில் ஒரு மூத்த அரச குடும்ப உறுப்பினர் கைது செய்யப்படும் முதல் சம்பவம் என்பதால் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்ட்ரூவுக்கு வயது 66. அவர் தனது பிறந்தநாள் அன்றே கைது செய்யப்பட்டார். பிரிட்டன் போலீசார் அவரை "பொது அலுவலகத்தில் தவறான நடத்தை" (misconduct in public office) என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தனர்.
இந்த குற்றச்சாட்டு, அவர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகளுடன் தொடர்புடையது. எப்ஸ்டீன் மீதான பாலியல் குற்ற வழக்குகளில் புதிதாக வெளியான ஆவணங்கள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
இதையும் படிங்க: எப்ஸ்டீன் மோசமான நபர்! 20 வருசத்துக்கு முன்னாடி நடந்தது?! உலகை உலுக்கிய பாலியல் குற்றவாளி?! எதையும் மறைக்கல! ட்ரம்ப் ஓபன் டாக்!
ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற அமெரிக்க தொழிலதிபர், சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர். சிறையில் இருந்தபோது அவர் உயிரிழந்தார். அவரது வழக்கு தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்கள் சமீபத்தில் அமெரிக்க அரசால் வெளியிடப்பட்டன.
அவற்றில் ஆண்ட்ரூ எப்ஸ்டீனுக்கு ரகசிய தகவல்களை (பிரிட்டன் அரசின் வர்த்தக ரகசியங்கள் உள்ளிட்டவை) அனுப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆண்ட்ரூ முன்பு பிரிட்டனின் சர்வதேச வர்த்தக பிரதிநிதியாக பணியாற்றியவர்.
இந்த விவகாரம் வெளியான பிறகு ஆண்ட்ரூ இளவரசர் பட்டத்தை இழந்தார். அரச குடும்ப பதவிகளிலிருந்து விலகினார். அரண்மனையிலிருந்து வெளியேறினார். ஆனால், புதிய ஆவணங்கள் வெளியாவதால் விசாரணை தீவிரமடைந்தது.
நேற்று காலை நார்போக் பகுதியில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் அரண்மனைக்கு போலீசார் சென்று அவரை கைது செய்தனர். பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு மாலையில் "விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டார்" என்று போலீசார் அறிவித்தனர். இதன்படி, அவர் மீது இன்னும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை, ஆனால் விசாரணை தொடர்கிறது.
இந்த சம்பவம் பிரிட்டன் அரச குடும்பத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மன்னர் சார்லஸ் "சட்டம் தன் போக்கில் நடக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். உலக அளவில் எப்ஸ்டீன் விவகாரத்தில் தொடர்புடைய பலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆண்ட்ரூ மீதான இந்த கைது, அரசியல் மற்றும் அரச குடும்ப விவகாரங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நான் வருந்துறேன்! மன்னிப்பு கேட்டுக்கிறேன்!! உலகை அதிர வைக்கும் எப்ஸ்டீன் பாலியல் வழக்கு! பில்கேட்ஸ் விளக்கம்!