சபரிமலையில் ஜனாதிபதி! ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது விபத்து! பதறிப்போன அதிகாரிகள்!
கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஹெலிகாப்டர் சக்கரம், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தில் புதைந்தது. பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் ஹெலிகாப்டரை மீட்டனர்.
பதானம்திட்டா, அக்டோபர் 22: கேரளாவிற்குநான்கு நாள் பயணமாக வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஹெலிகாப்டர் சக்கரம், புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் ஹெலிபேட்டில் புதைந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. மோசமான வானிலை காரணமாக நிலக்கல் தளத்திற்கு பதிலாக சப்ரமாடம் ஸ்டேடியத்தில் இறக்கப்பட்ட ஹெலிகாப்டரை, போலீஸ் மற்றும் தீயணைப்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். ஜனாதிபதி முர்முவுக்கு எந்த ஆபத்தும் இல்லை.
ஐப்பசி பூஜை நிறைவு நாளான இன்று காலை, திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து சபரிமலைக்கு செல்ல ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக நிலக்கல் தளத்திற்கு மாற்றாக சப்ரமாடம் ராஜிவ் காந்தி இன்டோர் ஸ்டேடியத்தில் ஜனாதிபதியில் ஹெலிகாப்டர் தரை இறக்கம் செய்யப்பட்டது. இந்த தளம் புதிதாக கான்கிரீட் பூசப்பட்டது, ஆனால் முழுமையாக உலரவில்லை.
இதையும் படிங்க: பாலத்தின் தடுப்பை உடைத்து ஆற்றுக்குள் பாய்ந்த ட்ராக்டர்!! துர்கா சிலை கரைக்கும் நிகழ்வில் சோகம்!! பலியான பிஞ்சுகள்!
ஜனாதிபதி முர்மு ஹெலிகாப்டரில் இருந்து பாதுகாப்பாக இறங்கிய பிறகு, அதிகாரிகள் சக்கரங்கள் கான்கிரீட்டில் புதைந்திருப்பதைக் கண்டனர். ஹெலிகாப்டரின் எடையால் தளம் சரிந்தது. உடனடியாக, பாதுகாப்பு குழு, போலீஸ், தீயணைப்பு பணியாளர்கள் இணைந்து ஹெலிகாப்டரை (Mi-17) மீட்டனர். வீடியோ காட்சிகளில், 20-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டரை இழுத்து வருவது பதிவாகியுள்ளது. "கான்கிரீட் முழுமையாக உலராததால் இது நடந்தது" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜனாதிபதி முர்மு சப்ரமாடத்தில் இருந்து சாலை வழியாக பம்பா சென்று, சபரிமலைக்கு ஏறி தரிசனம் செய்தார். பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டி, சாஸ்தா சன்னிதானத்தில் அர்ச்சனை செய்தார். இது அவரது ஜனாதிபதி பதவிக்காலத்தில் சபரிமலைக்கு முதல் வருகையாக பார்க்கப்படுகிறது.
சபரிமலை தரிசனத்தை முன்னிட்டு, அக்டோபர் 22, 23 ஆகிய 2 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அக்டோபர் 21 அன்று திருவனந்தபுரத்தில் தங்கிய ஜனாதிபதி முர்மு, அக்டோபர் 23 அன்று ராஜ் பவன் அருகே முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறந்து வைக்கிறார். சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குரு மகாசமாதி நூற்றாண்டு விழா, கோட்டயம் ஸ். தாமஸ் காலேஜ் பிளாட்டினம் ஜூபிலி ஆகியவற்றில் பங்கேற்கிறார். அக்டோபர் 24 அன்று எர்நாகுளம் ஸ். டெரசா காலேஜ் நூற்றாண்டு விழாவுடன் பயணம் முடிவுறும். இந்நிலையில் ஹெலிகாப்டர் சக்கரங்கள் சிக்கிய இந்த சம்பவம், ஹெலிபேட் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஃபாரின் டூர் கூடாது! எலெக்ஷன் முடியுற வரை இன்ப சுற்றுலா நோ!! ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!