தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட உஷா... அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
உஷா வயிற்றில் உள்ள கத்திரிக்கோலை அகற்ற மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கேரளாவில் மாநிலத்தில் அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கத்திரிக்கோல் மறதியாக வைத்த மருத்துவ குழு ஐந்து ஆண்டுகள் வயிற்றில் கைத்திருக்கோல் சுமந்து கொண்டு வாழ்ந்த பெண். கேரளாவில் மருத்துவத்துறையின் அலட்சியத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் புன்னப்ராவைச் சேர்ந்த உஷா ஜோசப் (59) என்பவருக்கு, கடந்த 2021 மே மாதம் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்பை கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீரில் இரத்தம் கசிவு போன்ற உபாதைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையில், அவரது வயிற்றில் 12 செ.மீ நீளமுள்ள கத்திரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “"டாக்டர் லலிதாம்பிகா அறுவை சிகிச்சை செய்தார். நேற்று இரவு, அவர் என் மகனுக்கு போன் செய்து வந்தனம் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு மகளிர் மருத்துவ நிபுணரிடம் என்னை அழைத்துச் செல்லும்படி கேட்டார். வருகையின் போது, மருத்துவர் என்னை திங்கட்கிழமை அனுமதிக்குமாறும், ஃபோர்செப்ஸை அகற்ற அறுவை சிகிச்சை செவ்வாய்க்கிழமை செய்யப்படும் என்றும் கூறினார். ஆனால் மருத்துவக் கல்லூரியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் எனது சிகிச்சையைத் தொடர விரும்புகிறேன்," எனக்கூறினார்.
இதனையடுத்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது உஷா வயிற்றில் உள்ள கத்திரிக்கோலை அகற்ற மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்று அறுவை சிகிச்சை மூலம் கத்திரிக்கோலை வெளியே எடுக்க உள்ளன. அரசு மருத்துவத்துறையின் அலட்சியத்தால் ஏற்ப்பட்ட இந்த சம்பவம் கேரளா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சமரசம் செய்து கொண்டார் பிரதமர் மோடி..!! மீண்டும் அவர் சரண்டர் ஆவார்..!! ராகுல் காந்தி கடும் தாக்கு..!!
இதையும் படிங்க: AI மாநாட்டில் அத்துமீறல்..! ஒட்டுமொத்த இந்தியாவுக்கே அவமானம்..!! இளைஞர் காங்கிரஸுக்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!