ஆசிய ஓட்டப்பந்தய போட்டியில் அசத்திய தமிழக வீராங்கனை... வாழ்த்துக்களை அள்ளித் தெளித்த நயினார்..!
பக்ரைனில் நடந்த ஆசிய விளையாட்டு ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி இன்று அசத்திய தமிழக வீராங்கனைக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் (Asian Youth Games 2025) கபடி போட்டியில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளன. இந்த இரட்டைத் தங்க வெற்றி, இந்தியாவின் இளம் வீரர்களின் திறமையையும், அணியின் ஒற்றுமையையும் உலக அரங்கில் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டிகள், பஹ்ரைனின் ரிஃபா நகரில் உள்ள இஸா ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கில் நடைபெற்றன.அங்கு இந்திய வீரர்கள் ஆதிக்கத்தைப் பிரதிபலித்தனர்.ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், 14 முதல் 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.
மேலும் 222 இந்திய வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கபடி போட்டிகள் அக்டோபர் 23 அன்று தொடங்கி, 31 வரை நீடிக்கும் இந்த போட்டிகளில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மூன்றாவது இளையோர் ஆசிரியர் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் வீராங்கனை எட்வினா ஜெய்சன் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணியா? என்ன செய்ய போறீங்க? நயினார் நாகேந்திரன் சூசகம்...!
பஹ்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் 3வது இளையோர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாரணமாள்புரம் விளையாட்டு கழக வீராங்கனை எட்வினா ஜெய்சன் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று நமது இந்திய திரு.நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்று கூறினார். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் மென்மேலும் பல சாதனைகள் புரிய, இறைவன் துணை நிற்க வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விவசாயி விரோத திமுகவின் உண்மை முகம் இதுதான்..! வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நயினார் நேரில் ஆறுதல்...!