×
 

ஒரு நபருக்கு 9 சிம் கார்டு மட்டுமே அனுமதி! மோசடிக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு! அமலாகும் புதிய விதி!

அதேநேரத்தில், அரசின் டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் தளத்துடன் தங்களது தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நபரின் பெயரில் ஏற்கனவே 9 சிம் கார்டுகள் இருந்தால், அதற்கு மேல் புதிய சிம் கார்டு வழங்குவதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய உத்தரவு விரைவில் அமலுக்கு வருகிறது. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளின் எண்ணிக்கையை சரிபார்த்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய விதிகளின்படி, இந்தியாவில் ஒருவரின் பெயரில் அதிகபட்சம் 9 மொபைல் இணைப்புகள் மட்டுமே இருக்கலாம். ஜம்மு - காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு இந்த வரம்பு 6 சிம் கார்டுகளாக உள்ளது.

இந்த விதியை மேலும் தீவிரமாக அமல்படுத்தும் வகையில் தொலைத்தொடர்பு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, புதிய சிம் கார்டுக்கு ஒருவர் விண்ணப்பிக்கும்போது, அவரது பெயரில் ஏற்கனவே எத்தனை மொபைல் இணைப்புகள் உள்ளன என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்தியாவின் எதிர்காலத்தை AI மூலம் மாற்ற திட்டம்? செயலாளர்களுடன் மோடி நடத்திய உயர்மட்ட ஆலோசனை!

இதற்காக மத்திய அரசின் ‘டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் பிளாட்பார்ம்’ பயன்படுத்தப்பட உள்ளது. பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த தளத்தின் மூலம், ஒருவரின் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையை எளிதாக கண்டறிய முடியும்.

மேலும், அனுமதிக்கப்பட்ட சிம் கார்டு எண்ணிக்கையை ஏற்கனவே எட்டியுள்ளவர்களை அடையாளம் காணும் வகையில் புகைப்பட அடிப்படையிலான அடையாள வசதியும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் புதிய சிம் பெறுவதற்கான தகுதி உள்ளதா என்பதை நிறுவனங்கள் சரிபார்க்க முடியும்.

ஒருவர் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட வரம்பை எட்டியிருந்தால், அவருக்கு புதிய சிம் கார்டு வழங்கப்படாது. தவறுதலாக வரம்பை மீறி புதிய இணைப்பு வழங்கப்பட்டால், அந்த இணைப்பு உடனடியாக முடக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அரசின் டிஜிட்டல் இன்டலிஜென்ஸ் தளத்துடன் தங்களது தொழில்நுட்ப அமைப்புகளை ஒருங்கிணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருவரின் பெயரில் அதிக எண்ணிக்கையில் சிம் கார்டுகள் பெறப்பட்டு, அவை மோசடி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி வீடியோ நீக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம்! மெட்டா குழுவை நேரில் அழைத்த மத்திய அரசு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share