வேண்டவே வேண்டாம்... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு... திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...!
வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர்.
அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், தமிழக அரசு கடுமையாக இதனை எதிர்த்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மிண்ட் பகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர் 'சென்னை'..!! திமுகவின் 'மழைக்கு தயார்' என்ன ஆச்சு..?? விளாசும் மக்கள்..!!
இந்தப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மேயர் பிரியா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதே போல் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டமானது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதேபோல் திருவள்ளூரில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: #Breaking காவலர் குடியிருப்பில் படுகொலை... திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய அண்ணாமலை!