×
 

SIR படிவத்தை நிரப்பாவிட்டால்... தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு...!

நவம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலகட்டம் முழுவதுமே கணக்கெடுப்பு பணி மட்டும்தான் நடக்க உள்ளது.

எஸ்ஐஆர் பணிகள் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். எதிர்பார்த்ததை விட இந்த பணிகள் சிறப்பாகவே நடக்கும் என சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பி கொடுக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். வேறு இடத்துக்கு குடிப்பெயர்ந்தவர்கள் அதாவது முன்பு இருந்த முகவரியை மாற்றிக் கொண்டவர்கள் எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பி கொடுக்கவில்லை என்றால் அவங்களுடைய பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

இதுவரைக்கும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்காக தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கக்கூடிய விஷயங்கள் என்ன? 

முறையான வாக்காளர் இறுதி பட்டியலை தயாரிப்பதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான பணிகளை நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி முடக்கி விட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 77,000 தேர்தல் ஆணைய பணியாளர்கள் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி வரைக்கும் நடைபெறவுள்ள இந்த எஸ்ஐஆர் பணிகளில்  முக்கியமான ஒன்று கணக்கெடுப்பு பணி. 

இதையும் படிங்க: இதனால பெரிய குழப்பம்... சும்மா கணக்கு காட்டுறாங்க..! SIR விவகாரத்தில் NR இளங்கோ காட்டம்...!

நவம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலகட்டம் முழுவதுமே கணக்கெடுப்பு பணி மட்டும்தான் நடக்க உள்ளது. இதன்படி 2002க்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தவர்கள் அவங்களுடைய பிறப்பு மற்றும் குடியிருப்பு சான்றுகளை நிரூபிக்க வேண்டி இருக்கும். இதுக்காக 234 தொகுதிகளலையும் வீடு வீடாக சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எஸ்ஐஆருக்கான படிவங்களை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். படிவம் 6, 7, 8  இந்த மாதிரி எண்களால் குறிப்பிடப்பட்ட படிவங்கள் வழங்கப்படும் என  சொல்லப்படுகிறது. 

இறந்தவங்களுடைய பெயரும் இந்த கணக்கெடுப்பு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்படும்.  வீடு வீடா வரக்கூடிய தேர்தல் ஆணைய பணியாளர்களே  விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவி செய்வார்கள். அப்போது ஆதாரமாக பிறப்பு சான்று, பள்ளி மதிப்பெண் பட்டியல், பேன் கார்டு, ஆதார் அடையாள அட்டையை கொடுக்கலாம். குடியிருப்புக்கான ஆதாரமாக வங்கி பாஸ்புக், அஞ்சல் பாஸ்புக், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், வாடகை ஒப்பந்தம், மின் கட்டண ரசீது, தொலைபேசி ரசீது, எரிவாயு இணைப்பு ரசீது இதையெல்லாம் சமர்ப்பிக்கலாம்.

டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகக்கூடிய வரைவு வாக்காளர் பட்டியலில், உங்களோட பெயர் விடுபட்டிருத்தால் படிவம் 6-யை பூர்த்தி செய்து, பெயரை இணைக்கிறதுக்காக எழுதி கொடுக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாதான் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ம்ஆம் தேதி வெளியாகும்.

இதையும் படிங்க: SIR... பூத் ஏஜென்ட்களிடம் பொறுப்பா? அதிமுக கடும் எதிர்ப்பு... தேர்தல் ஆணையத்தை அணுக முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share