×
 

SIR... பெயர் சேர்க்க 39 ஆயிரம் படிவங்கள் வந்திருக்கு... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 39 ஆயிரம் படிவங்கள் வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளின்போது, முந்தைய பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், பலர் தங்கள் பெயர் வரைவு பட்டியலில் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இத்தகையோர் தங்கள் பெயரை மீண்டும் சேர்க்க விரும்பினால், இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர்கள் தங்கள் பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்கள் அல்லது சேர்க்கைகளை மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அல்லது நீக்கப்பட்டவர்கள், புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்புபவர்கள் படிவம் 6-ஐப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இறுதி நாள் ஜனவரி 18, 2026 ஆகும். இந்தக் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்தால், தகுதியானவர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.படிவம் 6-ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாகப் பெற்றுப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சேவை போர்ட்டல் (voters.eci.gov.in) அல்லது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இணையதளம் (elections.tn.gov.in) வழியாகவும் விண்ணப்பிக்கலாம். 

இதையும் படிங்க: #BREAKING: முதல்வர் ஸ்டாலினின் சொந்தத் தொகுதியில் 1 லட்சம் பேர் நீக்கம்…முக்கிய அறிவிப்பு…!

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பட்டியலில் சேர்க்க விண்ணப்பங்கள் கொடுத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார். 39,000 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: #BREAKING: சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..! முழு விவரம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share