திருப்பதி கலப்பட நெய் வழக்கில் முதல் அதிரடி ஆக்ஷன்... முக்கிய சீனியர் அதிகாரியை வீடு புகுந்து தூக்கிய எஸ்.ஐ.டி...!
திருப்பதி கலப்பட நெய் வழக்கில் தேவஸ்தான கொள்முதல் பிரிவு அதிகாரியை கைது செய்த எஸ்.ஐ.டி. அதிகாரிகள்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள லட்டு நெய் கலப்பட வழக்கு தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) சிபிஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) முதல் கைது செய்ததுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதங்கள் மற்றும் பூஜைகளுக்கு பயன்படுத்துவதற்காக 6 மாதங்களுக்கு 17000 முதல் 2000 டன் நெய் தேவைப்படுவதால் அதனை டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அறங்காவலர் குழு முடிவின்படி திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர். டெய்ரியிடம் டெண்டர் கோரப்பட்டு நெய் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்திடம் தேவஸ்தானத்திற்கு தேவையான அளவிற்கு நெய் உற்பத்தி செய்து டெலிவரி செய்வதற்கான உரிய வசதிகள் இல்லாவிட்டாலும் அவர்கள் டெண்டர் பெற்றனர்.
அதன் பிறகு ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஸ்ரீ வைஷ்ணவி டெய்ரி மூலம் உத்தரகாண்டில் உள்ள போலோ பாபா டெய்ரி நிறுவனத்திடன் இருந்து நெய் பெற்று தேவஸ்தானத்திற்கு கடந்த 2024 ஆண்டு மே, ஜுன் மாதத்தில் சப்ளை செய்தனர். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து தேவஸ்தானத்தின் செயல் அதிகாரியாக சியாமளாராவ் நியமிக்கப்பட்டார். சியாமளா ராவ் பதவியேற்ற பின்னர் தேவஸ்தானம் கொள்முதல் செய்த நெய் கலப்படம் செய்யப்பட்டது அறிந்து அதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வக முடிவில் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்த நெய்யில் பன்றிக் கொழுப்பு, பாமாயில் உள்ளிட்டவை கலந்த ரசாயனம் நெய் என்று சப்ளை செய்ததாக ஆய்வக முடிவில் தெரியவந்தது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மாநில அரசு இதுகுறித்து விசாரணை செய்வதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. ஆனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து கலப்பட நெய் விவகாரத்தில் சிபிஐ இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை நியமனம் செய்தனர். சிபிஐ இணை இயக்குனர் வீரேஷ் பிரபு தலைமையில் நடந்த விசாரணையில் தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்தது ரசாயனம் கலந்த கலவையை நெய் என்று சப்ளை செய்தது உறுதி செய்யப்பட்டு ஏஆர் டெய்ரியின் நிர்வாக இயக்குநர் ராஜு ராஜசேகரன், போலே பாபா டெய்ரியின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின் மற்றும் பொமில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரியின் சி.இ.ஓ. அபூர்வா வினய் காந்த் சாவ்டா, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி உதவியாளர் சின்ன அப்பன்னா உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... ராமேஸ்வரத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள்...!
இந்த விவகாரத்தில் நெய் டெண்டர் எவ்வாறு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்து முன்னாள் செயல் அதிகாரி தர்மா ரெட்டியிடம் 14 மணி நேரம் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் முன்னாள் தலைவர் சுப்பா ரெட்டியிடம் விசாரிக்க நேரில் வரும்படி எஸ்.ஐ.டி. அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சுப்பா ரெட்டி பேசுகையில் கலப்பட நெய் விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை விசாரணைக்கு விரைவில் செல்வேன். பரக்காமணி மோசடி விவகாரம் எனது பதவி காலத்தில் நடக்கவில்லை என்றார்.
இந்தநிலையில் தேவஸ்தான பொது மேலாளராக கொள்முதல் துறையில் பணியாற்றி வந்த ஆர்.எஸ்.எஸ்.வி.ஆர். சுப்ரமணியத்தை அவரது வீடு உள்ள திருப்பதி என்.ஜி.ஓ காலனியில் வைத்து சுப்ரமணியத்தை எஸ்.ஐ.டி அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் எஸ்.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து மீண்டும் விசாரணைக்கு காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை மகாதீபம்.... மலையேறு அனுமதி இருக்கா? ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்கள்...!