“மீண்டு வந்த சோனியா!” மருத்துவமனையிலிருந்து அனுமதிக்கப்பட்டிருந்து டிஸ்சார்ஜ்! காங்கிரஸ் தொண்டர்கள் நிம்மதி
மூச்சுத்திணறல் பாதிப்பிலிருந்து மீண்ட சோனியா காந்தி, இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு டெல்லி இல்லம் திரும்பினார்.
உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, இன்று முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினார்.
கடந்த ஜனவரி 5-ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு, திடீர் மூச்சுத்திணறல் மற்றும் இருமல் காரணமாகச் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக அவருக்கு ‘பிரான்கியல் ஆஸ்துமா’ (Bronchial Asthma) பாதிப்பு லேசாக அதிகரித்திருந்தது கண்டறியப்பட்டது. கடந்த சில நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த அவர், சிகிச்சைக்குப் பின் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
79 வயதான சோனியா காந்தி, டெல்லியின் மாசு மற்றும் குளிர் காரணமாகத் தொடர்ந்து நுரையீரல் தொடர்பான பரிசோதனைகளைச் செய்து வருகிறார். இந்த முறை அவருக்கு ஏற்பட்ட கடுமையான இருமல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆன்டிபயாட்டிக் மற்றும் இதர சப்போர்ட்டிவ் மருந்துகள் வழங்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு அவர் உடல்நிலை நல்ல ஒத்துழைப்பு வழங்கியதையடுத்து, அவரது உடல்நிலை தற்போது ‘அப்சல்யூட்லி ஸ்டேபிள்’ (Absolutely Stable) நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: நாங்கள் உண்மைக்காக போராடுகிறோம்... யங் இந்தியன் வழக்கை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதி..!
இதனைத் தொடர்ந்து, அனைத்து மருத்துவப் பரிசோதனைகளிலும் முன்னேற்றம் தெரிந்ததை அடுத்து, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவின் ஆலோசனையின்படி அவர் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டெல்லி ஜன்பத்தில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பிய சோனியா காந்தி, இன்னும் சில நாட்களுக்கு ஓய்வெடுப்பார் எனத் தெரிகிறது. சோனியா காந்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் பழிவாங்கும் செயலை அம்பலப்படுத்திய நீதிமன்றம் - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்