கோடீஸ்வர முதல்வர்கள் பட்டியலில் விஜய்க்கு 3வது இடம்! முதலிடம் யார் தெரியுமா? சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?
நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் தென்னிந்திய மாநிலக்ஙளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன
சென்னை: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் தென்னிந்திய மாநில முதல்வர்களே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இடத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ₹1,413 கோடியாகும். நிலம், அசையா சொத்துகள், வணிக வளாகங்கள், கல்வி அறக்கட்டளைகள், சுரங்கங்கள் மற்றும் வங்கி வைப்புகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அவரது சொத்துகளில் 80 சதவீதத்திற்கும் மேல் மூதாதையர் சொத்துகளாகும். அவருக்கு ₹265 கோடி கடன் உள்ளது.
இரண்டாவது இடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார். அவரது சொத்து மதிப்பு ₹931 கோடி. அவரது சொத்துகளில் 87 சதவீதம் அசையும் சொத்துகள் மற்றும் குடும்ப நிறுவனங்களுடன் தொடர்புடையவை. பங்குச் சந்தை முதலீடுகளும் கணிசமான அளவில் உள்ளன.
இதையும் படிங்க: கர்நாடக முதல்வர் சிவக்குமார்! துணை முதல்வர் பரமேஸ்வரா!! போட்டோ போட்டு அறிவித்தார் சித்தராமையா!
மூன்றாவது இடத்தை தமிழக முதல்வர் விஜய் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ₹648 கோடி. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவர் தாக்கல் செய்த விவரப்படி, அவரது சேமிப்புக் கணக்கில் ₹213 கோடியும், பல வங்கிகளில் நிலையான வைப்புத் தொகையாக ₹100 கோடிக்கும் மேலும் உள்ளது. பங்குச் சந்தை முதலீடுகள் ஒப்பீட்டளவில் குறைவு.
தென்னிந்தியாவின் ஆதிக்கம் இதில் தெளிவாகத் தெரிகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் நாட்டின் முதல் 10 பணக்கார முதல்வர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் முதல் 10 இடங்களில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஐந்து முதல்வர்கள் உள்ளனர்.
ஏடிஆர் அமைப்பு தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியல் வெளியானதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிவக்குமார் தலைமையில் கர்நாடக அமைச்சரவை பட்டியல் ரெடி! சித்தராமையா மகனுக்கு அமைச்சர் பதவி!!