×
 

சினிமா வேற.. நிஜம் வேற..! விஜய்யை வெளுத்து வாங்கிய எஸ்.பி. வேலுமணி!

விஜய் திமுக-வின் 'பி' டீம்; எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கவே பிரசாரம் செய்கிறார் என கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அவர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். சினிமா வாழ்க்கை வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்பதைப் புரிந்துகொண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள விஜய்யைக் கடுமையாகச் சாடிய வேலுமணி, "சினிமாவில் நடிப்பவர்கள் எல்லோரும் நிஜ வாழ்க்கையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில பெண்களுக்கு இதனைத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இவர்கள் எந்தத் தொகுதியிலும், எந்தக் காலத்திலும் வெற்றிபெறப் போவதில்லை என எள்ளி நகையாடினார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், புதிதாகக் கட்சி ஆரம்பித்து வந்துள்ள நடிகர் விஜய், திமுக-வை மட்டும் பெயருக்கு விமரிசித்துவிட்டுப் போகிறார். இதன் மூலம் திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, மறைமுகமாக திமுக-விற்கே 'பி' டீமாக (B-Team) ஆதரவாகச் செயல்படுகிறார். இது ஒரு திட்டமிட்ட அரசியல் நாடகம் என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு உரிய பாதுகாப்பு இல்லை! திமுக அரசு மீது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கடும் சாடல்!

கடந்த 10 நாட்களாக வெளியே வராமல் மவுனமாக இருந்த விஜய், இப்போது மீண்டும் தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார். மக்கள் அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்த அவர், அதிமுக-விற்கு விழ வேண்டிய ஒரு ஓட்டு கூடச் சிதறிவிடக் கூடாது எனத் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார்.

இதையும் படிங்க: எந்த கொம்பன் வந்தாலும்.. விஜய் ஆட்சியில் அமர்வதை தடுக்க முடியாது..!! அடித்துக்கூறிய செங்கோட்டையன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share