×
 

“பாஜகவின் பிடியில் சபாநாயகர்; நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் முடக்கம்!” ஜோதிமணி எம்பி கடும் சாடல்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முடக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட பெண் எம்பிக்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் திட்டமிட்டு ஒடுக்கப்படுவதாகவும், சபாநாயகர் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்குப் பணிந்து செயல்படுவதாகவும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனா விவகாரம் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் இந்தியா கூட்டணி சார்பில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஆனால், இந்தப் பதிலளிக்கப் பயந்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. மாறாக, எதிர்க்கட்சியில் உள்ள பெண் உறுப்பினர்கள் மீது தேவையற்றக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: “நாடாளுமன்றத்தில் பிரதமருக்கே பாதுகாப்பில்லை!” சேலத்தில் கனிமொழி எம்.பி. காட்டம்!

இந்தியா கூட்டணி சார்பில் யார் யார் பேசுவார்கள் என்ற பட்டியல் காலையிலேயே வழங்கப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கியபோது, மீண்டும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பேசும் உண்மைகள் பிரதமர் மோடியையும், பாஜகவையும் பாதிக்கும் என்பதற்காகவே அவர்கள் பேச அனுமதிப்பதில்லை.

"சபாநாயகர் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை; அவர் பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளார். மத்திய அரசை கேட்டுத்தான் அவர் பதில் அளிக்கிறார். அவருக்குப் பதிலாக மத்திய அமைச்சரே அவையில் பேசுகிறார். ஒட்டுமொத்தமாக அவையின் கட்டுப்பாட்டைச் சபாநாயகர் இழந்துவிட்டார்," என ஜோதிமணி எம்பி சாடினார்.

மக்களின் பிரச்சினைகளைப் பேசவே பெண் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஜனநாயகத்தை ஒடுக்கும் விதமாகச் சாதாரணப் பெண் எம்பிக்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் பொறுமையாக இருந்தாலும், ஆளுங்கட்சி ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுகிறது.

இதையும் படிங்க: சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்தில் ஜனநாயக படுகொலை என சிபிஎம் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share