#BREAKING அதிகாலையிலேயே அதிர்ச்சி... நடுக்கடலில் 25 மீனவர்கள் சுற்றி வளைத்து கைது... இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்...!
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
காரைக்காலைச் சேர்ந்த 25 மீனவர்கள் காரை நகர் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தங்களது வாழ்வாதாரத்திற்காக கடலில் இறங்கி மீன்பிடிக்கும் மீன்வர்கள், இயற்கை சீற்றங்களால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே ஏராளம். மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் நடுக்கடலில் சிக்கித் தவிப்பதும், மீன் கிடைக்காமல் கரைக்கு திரும்பும் சூழ்நிலையும் ஏற்படுவது உண்டு. மேலும் அவ்வப்போது காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகள் காரணமாக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் தவறான திசைக்கு இழுத்துச் செல்லப்படுவது உண்டு. அப்படி தெரியாமல் எல்லைக்குள் நுழையும் தமிழக மீனவர்களை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 25 பேரையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. காரைக்கால் மீன்பிடித்துறை முகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு, காரை நகர் கடல் எல்லையில் காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: காரைக்காலுக்கு புறப்பட்ட அமித் ஷா..! தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை..!
அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக 25 காரைக்கால் மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். காங்கேசன் கடற்கரை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகள் இலங்கை எல்லைக்குள் வருவதாக கூறி இலங்கை அரசு அடிக்கடி நடவடிக்கை எடுக்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றன. மேலும், சில சம்பவங்களில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும் நிகழ்ந்துள்ளது. இத்தகைய அட்டூழியங்களால் இரு நாடுகளுக்கிடையேயான உறவும் பாதிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி, தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டித்துள்ளதோடு, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க: பத்து வருஷ போராட்டம்... செவிசாய்க்காத திமுக அரசு.. மீன்பிடி தூண்டில் வளைவு அமைக்க சீமான் வலியுறுத்தல்..!