×
 

பாக். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பயப்படாது… அமைச்சர் ராஜ்நாத் சிங் தடாலடி!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் பயப்படாது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்துரிங் வெற்றியை கொண்டாடும் வகையில் ஸ்ரீ நகரில் ராணுவ வீரர்களை சந்தித்து பாதுகாப்பு துறை அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து இந்திய ராணுவம் தாக்கி அளித்த பாகிஸ்தான் ஆயுதங்களை பார்வையிட்டார். பின்னர் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, பாரத் மாதா கி ஜே என முழங்கி தனது உரையை தொடங்கினார். ஆப்ரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களின் பங்களிப்பு தியாகத்திற்கு வீரவணகத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். நாங்கள் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும், பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத அளவுக்கு பாடம் கற்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்திய வீரர்களின் பெருமைப்படுவதாகவும் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். நம்மை சீண்டினால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என எச்சரித்த அவர், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் பயப்படாது என்றும் தீவிரவாதத்தை அழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: வக்பு திருத்தச் சட்டத்திற்கான இடைக்காலத் தடை தொடரும்.. சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்!

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய ராஜ்நாத் சிங், கர்மாவின் பலனை பாகிஸ்தான் அனுபவிக்கும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை..! மிக முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share