கவுண்டவுன் ஸ்டார்ட்...!! ஆட்டத்தை ஆரம்பித்த ‘மோந்தா’ புயல்... துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...!
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றெழுத்த தாழ்வு மண்டலமானது தீவிரமடைந்து புயலாக உருமாறி இருக்கிறது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 11 மணி நிலவரப்படி புயலாக மாறியதாக ஒரு அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ மண்டலம் தீவிரமடைந்து புயலாக உருமாறிய நிலையில் அந்த புயலான தீவிர புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வடமேற்கு திசையில் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் மோந்தா புயல் நாளை ஆந்திரா மாநிலம் காக்கி நாடா அருகே கரையைக் கடக்கும் எனக்கூறப்படுகிறது. தற்போது புயலானது மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அது கரையை கடக்கும் பொழுது அதனுடைய வேகம் என்பது 100 கிலோமீட்டர் என்ற அளவில் இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது புயலுடைய வேகம் என்பது கடலில் அதாவது நீர் மேற்பரப்பில் இருக்கும் பொழுது அதனுடைய வேகத்தை காட்டிலும், தரைக்கும் வரும் போது இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில்தான் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகரக்கூடிய அந்த புயலின் வேகம் என்பது நாளை ஆந்திரா மாநிலத்தில் கரையைக் கடக்கும் போது, 100 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னையிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் 16 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது வரைக்கும் நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னைக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் புயல் கரையை கடக்கக்கூடிய இடத்திற்கு அருகில் இருக்கக்கூடிய பகுதியில் தான் அதிகமான மழைக்கு வாய்ப்புள்ளது. அந்த வகையில்தான் சென்னைக்கு கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும் வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டு வேலை செய்யமாட்டியா? கணவன் கழுத்தில் கத்தியை இறக்கிய மனைவி...! பயங்கரமான ஆளு தான் போல...!
இந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் 2ம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சல்மான் கான் தீவிரவாதி... பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு...! ரசிகர்கள் ஷாக்...!