சோனியா காந்திக்கு என்னாச்சு? திடீரென மருத்துவமனையில் அனுமதி; உச்சக்கட்ட பரபரப்பு!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் சோனியா காந்தி. இவர் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். 78 வயதான இவர் தற்போது தனது மகளும், வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியுடன் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு சென்றார். இந்த நிலையில் சோனியா காந்திக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதாவது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதுக்குறித்து அவர் தனது மகள் பிரியங்கா காந்தியிடம் கூறியதாகவும் தெரிகிறது. இதை அடுத்து பிரியங்கா காந்தி, தனது தாய் சோனியா காந்தியை உடனடியாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சோனியா காந்திக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குடும்பத்தோடு இருப்பது போல ஒரு உணர்வு...ராகுல், சோனியா-உடனான சந்திப்பு பற்றி முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
இதையடுத்து அவரது உடல்நலம் இயல்பு நிலைக்கு திரும்பியது. பின்னர் சோனியா காந்தி வீடு திரும்பினார். இதுக்குறித்து இமாச்சல் பிரதேச முதல்வரின் ஊடக ஆலோசகர் நரேஷ் சவுகான் கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக சோனியா மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இது வழக்கமான பரிசோதனைகள் தான். அதன்பிறகு அவர் வீடு திரும்பினார் என்று தெரிவித்துள்ளார். திடீரென சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: குழப்பம் செய்யலாமானே யோசிச்சுட்டு இருக்காங்க... பாஜக-வை ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை!!
 by
 by
                                    