மத்திய அரசு பணிக்கு சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்... யார் இவர்...?
சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸ் ஒன்றிய அரசின் பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநராக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சகமானது, சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் ஐபிஎஸை, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனராக மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் துணை இயக்குனர் பதவியை பிரதிநிதித்துவ அடிப்படையில் நிரப்புவதற்காக இந்த ஆணையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் இருப்பதாகவும் அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் பணி பணி நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உள்ள அரசு பணியில் இருந்து அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவகுமாரம் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அந்த உத்தரவில் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சுதாகர் ஐபிஎஸ் போக்குவரத்து கூடுதல் ஆணையாளராக கடந்த சில ஆண்டுகளாக இங்கு பணியாற்றி இருக்கக்கூடிய நிலையில் அயலகப் பணியாக இந்த பதவியானது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
யார் இந்த சுதாகர் ஐபிஎஸ்?
சுதாகர் ஐபிஎஸ் சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராகக் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். மேலும் இவர் 2003ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். முன்னதாக தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த மகேஷ்குமார் அகர்வால் மத்திய அரசுப் பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநராக மகேஷ் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் எல்லை பாதுகாப்புப் படையின் கூடுதல் இயக்குநராக 4 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்றும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2024ம் ஆண்டு போக்குவரத்து காவலர்துறையினர் மஞ்சள் பை மூலமாக லஞ்சம் வாங்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதனால் கடும் கோபத்திற்கு ஆளான சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர், பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போக்குவரத்துக் காவலர்கள் தயவுசெய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுங்கள் என வாக்கி டாக்கியிலேயே பகிரங்க எச்சரிக்கை விட்டு தெறிக்கவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெக கொடி கம்பம் வைப்பதில் சிக்கலா..? நீதிமன்றம் கூறியது என்ன..?
இதையும் படிங்க: Breaking News: A+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி- பாஜக பிரமுகர், பிரபல ரவுடி படப்பை குணா கைது..!