×
 

சாலை விபத்தில் மகன் மரணம்...! துக்கம் தாளாமல் பெற்றோர் தூக்கிட்டு கொண்ட சோகம்..!

சட்டிஸ்கரில் மகன் இறந்த சோகம் தாங்க முடியாமல் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது.

சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கீர்-சாம்பா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான தர்தேய் கிராமத்தில், ஒரு குடும்பத்தின் வாழ்க்கை முற்றிலும் சிதைந்து போன ஒரு மிகப் பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணா படேல் என்ற 48 வயது கட்டுமானத் தொழிலாளி தனது மனைவி ரமாபாய் ஆகியோர், தங்கள் ஒரே மகன் ஆதித்யா படேலை இழந்த துக்கத்தைத் தாங்க முடியாமல், வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் ஒரே சேலையால் கட்டிய கயிற்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர்.

ஆதித்யா படேல், 21 வயதான இளைஞன். அவர் மாஸ்தூரி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த உள்ளார். அந்த விபத்து அந்தக் குடும்பத்தின் முழு உலகையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஒரே மகன், அவர்களது வாழ்க்கையின் அடித்தளம், அவர்களது உலகம், கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் என்று கிருஷ்ணா தனது கடிதத்தில் எழுதியிருந்தார்.

ஆதித்யா ஒரு கீழ்ப்படிதலான மகன், நண்பனைப் போல நடந்து கொண்டவன், பெற்றோரைப் பெற்றோரைப் போல கவனித்துக் கொண்டவன் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். சம்பவத்திற்கு முன்பு, கிருஷ்ணாவும் ரமாபாயும் ஒரு வீடியோ பதிவு செய்திருந்தனர். அதில் தங்கள் மனதில் இருந்த வலியை, மகனை இழந்த துயரத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதையும் படிங்க: என்னையே BLOCK பண்ணுறியா? காதலனை வீடுதேடிச் சென்று கொன்ற காதலி..!

மேலும், நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தையும் எழுதி வைத்திருந்தனர். அந்தக் கடிதத்தில், ஆதித்யா இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. அவன் எங்கள் ஆதாரம், எங்கள் உலகம். அவனை இழந்த பிறகு எங்களால் தாங்க முடியவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர். மகனை இழந்த சோகத்தில் இருந்து வெளிவர முடியாத பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: ஆணவக் கொலை அல்ல..! இளம்பெண் உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share