பிரதமர் மோடி ஒரு ஃபைட்டர், எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்வார் - ரஜினிகாந்த் புகழாரம்!
வாழ்வில் பல்வேறு சவால்களை திறம்பட தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றி பெற்ற போராளி பிரதமர் மோடி என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடி குறித்தான பல்வேறு கருத்துக்களையும் அதேபோன்று பஹல்காமில் நடைபெற்ற அந்த தாக்குதல் குறித்தான பல்வேறு கருத்துக்களை பகிர்ந்திருக்கின்றார்.
அதில் பிரதமர் மோடி ஒரு சிறந்த போராளியாக குறிப்பிட்டிருக்கின்றார். அதேபோன்று வாழ்வில் பல்வேறு சவால்களை திறம்பட தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றி பெற்ற போராளிதான் பிரதமர் மோடி என்று குறிப்பிட்டிருக்கின்றார். உள்நாட்டு பிரச்சனைகளை மட்டுமல்ல, சர்வதேச பிரச்சனைகளையும் திறம்பட சமாளித்தவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: இந்திய ராணுவம் தாக்குதல் பீதி.. இந்தியாவிலிருந்து தெறித்து ஓடும் பாகிஸ்தானியர்கள்!
அதேபோன்று கருணையே இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தீவிரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கையும் தனக்கு இருக்கின்றது எனவும் தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று ஜம்மு காஷ்மீரில் மறுபடியும் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்றவர், அந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
ஏனென்றால் பிரதமர் மோடி மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கின்றது. அவர் ஒரு சிறந்த போராளி அவர் எந்த சவாலையும் சந்திப்பார் எனவும் கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் சொல்லி வருவதை நிரூபிப்பார் என இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியிருக்கின்றார்.
இதையும் படிங்க: 93 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி அடித்த சிக்ஸர்.. துள்ளிக் குதிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!!