ஷாக்...! தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை ரத்து... சிறுமி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
2017 ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளி தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது.
சென்னை மாங்காடு அடுத்த மௌலிவாக்கம் பகுதியை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாபு என்பவரது மகள் ஹாசினி. இந்த ஆறு வயது சிறுமி கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி அன்று தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்தபோது திடீரென மாயமாகி இருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் தஷ்வந்த் என்ற 24 வயது இளைஞர் சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது.
பின்னர் உடலை ஒரு பையில் எடுத்துச் சென்று அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து தஷ்வந்த்தை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு செலவுக்கு பணம் கேட்டு தனது தாயை கொடூரமாக அடித்துக் கொலை செய்து விட்டு நகைகளை திருடி கொண்டு தஷ்வந்த் தப்பியதாக கூறப்பட்டது.
தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. மேலும், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: மனதை உலுக்கும் கல்லூரி மாணவன் கொலை! திமுக நிர்வாகி பேரனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வவந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் குற்றவாளி என கருதப்பட்ட தஷ்வந்தை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் மரண தண்டனை வழங்கியது ஏற்க முடியாது என கூறி தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம். சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர் தஷ்வந்த் தான் என உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறி தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரூர் துயரத்திற்கு நீதி கிடைக்காது... சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு...!