ஆடிப்போன ED... புரட்டியெடுத்த உச்ச நீதிமன்றம் - அடுத்த மூவ் என்ன?
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்த அந்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த 10 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் அடங்கிய அமர்வு அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அமலாக்கத்ததுறை அனைத்து எல்லை வரம்புகளையும் மீறியுள்ளது என்று நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது, அந்த மூல வழக்கு எங்கே இருக்கிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது உத்தரவில் கேள்வி எழுப்பியுள்ளனர். டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒரு தனி நபரோ ஊழியரோ செய்த ஒரு குற்றத்தை நிறுவனத்தின் குற்றமாக மாற்றக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தும்போது பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களை இரவு வரை விசாரித்தது நியாயமா? என்ற கேள்வியையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் அடங்கிய முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அமலாக்கத்துறை இந்த விசாரணையில் தலையிட்டது ஏன்? என்ற கேள்வியையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்.. இஸ்ரேலுக்கு போப் லியோ வலியுறுத்தல்..!
அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்ற கண்டனத்தையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் குற்றவாளியாக மாற்றுவதற்கு அமலாக்கத்ததுறை தனது விசாரணை மூலமாக முயற்சி செய்யலாமா? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பி இருக்கிறது. நிதிசார்ந்த முறைகேடுகள் டாஸ்மாக்கில் நடந்தால் அது எங்கு நடந்தது என்பதை நிரூபிக்க முடியுமா? என்றும் நீதிபதிகள் பிஆர் கவாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
டாஸ்மாக் வழக்கை கிரிமினல் வழக்காக எப்படி பதிவு செய்ய முடியும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியதோடு, கோடை விடுமுறைக்கு பின் இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமலாக்கத்ததுறை டாஸ்மாக் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு தடைவிதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பிந்தைய விசாரணையின் போது அமலாக்கத்துறை தலைமை நீதிபதிகளின் கேள்விகளுக்கான பதில் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 8வது ஊதியக்குழு: யார் யாருக்கு என்னென்ன பெனிஃபிட்ஸ்..? காத்திருக்கு பல குட் நியூஸ்..!