முன்னுரிமை அடிப்படையில் ‘போக்சோ சிறப்பு நீதிமன்றம்’.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
முன்னுரிமை அடிப்படையில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், முன்னுரிமை அடிப்படையில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சீண்டல்கள், தொந்தரவுகளை மட்டும் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம் திரிவேதி மற்றும் பி.பி.வராலே ஆகியோர் இந்த உத்தரவை மத்திய அரசுக்குப் பிறப்பித்தனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க அதற்கான தனி நீதிமன்றங்கள் போதுமான அளவில் இல்லை. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த வழக்குகளின் விசாரணையை முடித்து தீர்ப்பு அளித்துவிட வேண்டும்.
இதையும் படிங்க: விளம்பரத்துக்காக செய்றீங்களா..? பஹல்காம் தாக்குதல் குறித்து மனுதாக்கல் செய்த நபர்.. உச்ச நீதிமன்றம் வார்னிங்..!
ஆதலால், மத்திய அரச அனைத்து மாநில அரசுகளுடன் கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுத்து, முன்னுரிமை அடிப்படையில் போதுமான அளவு போக்ஸோ நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். போக்ஸோ வழக்குகளை விசாரிக்கவும் தனி சிறப்பு அதிகாரிகளை நியமித்து வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக விசாரிக்க சிரப்பு நீதிமன்றங்களை முன்னுரிமை அடிப்படையில் அமைக்க வேண்டும்.
போக்ஸோ வழக்கைப் பொருத்தவரை வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும், காலக்கெடுவுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறும் பெரும்பகுதி மாநிலங்கள் மத்திய அ ரசின் உத்தரவுக்கு ஏற்று, போக்ஸோ வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். தமிழகம், பீகார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போஸ்கோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் கூடுதலாக அமைக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசனை! ஜனாதிபதி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை..!