முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் சொத்துகள் முடக்கம்... ED அதிரடி நடவடிக்கை...!
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ச்சியடைந்தாலும், அதன் இருண்ட பக்கமாக ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பரவலாகத் தோன்றியுள்ளன. இந்த செயலிகள், திறன் விளையாட்டு என்று போலியாகக் கூறி, உண்மையில் சூதாட்டத்தை ஊக்குவிப்பதோடு, பெரும் அளவிலான சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைச் செய்கின்றன. 2025-ஆம் ஆண்டு வரை, இந்தத் துறை ரூ.8.3 லட்சம் கோடி மதிப்புடைய சந்தையாக வளர்ச்சியடைந்துள்ளது.
ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சியுடன். ஆனால் இதன் பின்னால் மறைந்துள்ளது பணமோசடி, ஏமாற்று மற்றும் சமூக அழிவு. அமலாக்க இயக்குனரகம் (ED) போன்ற அமலாக்க அமைப்புகளின் விசாரணைகள், இந்த செயலிகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.27,000 கோடி வரி இழப்பை ஏற்படுத்துவதையும், பயனர்களின் பணத்தை சர்வதேச அளவில் பரிமாற்றி, அது தீவிரவாத நிதியுதவிக்கும் பயன்படுத்தப்படுவதையும் வெளிப்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக, 2022 முதல் 2025 வரை 32-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகியுள்ளன, பெரும்பாலும் பண இழப்பால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நிகழ்ந்துள்ளது. இதனிடையே, ஆன்லைன் சூதாட்டு செயலியை விளம்பரப்படுத்திய கிரிக்கெட் வீரர்களின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை. கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா ஷிகர் தவானின் 11.14 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பு... மறுத்த கே.என்.நேரு.. புட்டு புட்டு ஆதாரங்களை வெளியிட்ட அமலாக்கத்துறை...!
சுரேஷ் ஷீலாவின் 6.64 கோடி மதிப்புள்ள சொத்துகளும், ஷிகர் தவானின் 4.5 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதன் மூலம் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றத்தின் அடிப்படையில் அமலாகத்துறை இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் இல்ல... அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி... அமைச்சர் கே.என்.நேரு பதிலடி...!