பார்லிமென்டை முடக்கும் எதிர்க்கட்சிகள்.. தைவானின் விசித்திர தேர்தல்.. Recall Elcection தெரியுமா?
பார்லிமென்டில் பெரும்பான்மை உள்ளதால், அரசின் மசோதாக்கள், திட்டங்களை முடக்கி வரும் எதிர்க்கட்சியின் எம்.பி.,க்களை திரும்பப் பெறுவதற்கான தேர்தல் தைவானில் நடக்கிறது.
கிழக்காசிய நாடான தைவான், தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என, சீனா கூறி வருகிறது. ஆனால், தனி நாடு உரிமையை தைவான் கேட்டு வருகிறது. இதனால், சீனாவுடன் அடிக்கடி உரசல் ஏற்படுகிறது. தைவானில் கடந்தாண்டு 2024 ஜனவரி தேர்தல்ல, ஜனநாயக முற்போக்கு கட்சி (DPP) தலைவர் லை சிங்-டே அதிபரா வெற்றி பெற்ராரு,
ஆனா அவரு கட்சி பார்லிமென்ட்டுல பெரும்பான்மையை இழந்துடுச்சு. எதிர்க்கட்சியான கோமிண்டாங் (KMT) 52 இடங்களையும், சின்ன கட்சியான தைவான் மக்கள் கட்சி (TPP) 8 இடங்களையும், 2 சுயேச்சைகளையும் சேர்த்து, 113 இடங்களில் 62 இடங்களோட பெரும்பான்மையை பிடிச்சிருக்காங்க
இதனால, DPP-யோட முக்கிய மசோதாக்கள், பாதுகாப்பு பட்ஜெட், நீதிமன்ற நியமனங்கள் எல்லாம் எதிர்க்கட்சியால முடக்கப்பட்டு, அரசு வேலை செய்ய முடியாம தவிச்சிக்கிட்டு இருக்கு.
இதையும் படிங்க: சுமூகமா போய்க்கலாம்!! நிம்மதியில் ஓம் பிர்லா.. அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு..!
இதன்காரணமாக தைவானில் இப்போ ஒரு பெரிய அரசியல் களேபரம் நடந்துக்கிட்டு இருக்கு. இதனால, KMT எம்.பி.க்களை பதவியிலிருந்து திரும்பப் பெற (recall) ஒரு பெரிய முயற்சி தொடங்கியிருக்கு, இதை “கிரேட் ரீகால்”னு சொல்றாங்க. இந்த ரீகால் தேர்தல், தைவானோட அரசியல் வரலாற்றுல மிகப் பெரிய முயற்சி. ஜூலை 26, 2025-ல், 24 KMT எம்.பி.க்கள் மீதான முதல் கட்ட ரீகால் வாக்கெடுப்பு நடந்தது.
இதுக்கு முன்னாடி, மே மாசத்துல ஆயிரக்கணக்கான மக்கள் “புளூபேர்ட் இயக்கம்”னு ஒரு போராட்டத்தை தொடங்கினாங்க, KMT-யோட “சீன ஆதரவு” கொள்கைகளுக்கு எதிரா. இவங்க சொல்றது, KMT எம்.பி.க்கள் சீனாவோட நெருக்கமா இருக்காங்க, தைவானோட பாதுகாப்பு பட்ஜெட்டை குறைக்கிறாங்க, சீனாவுக்கு ஆதரவா சட்டங்களை நிறைவேத்துறாங்கனு.
இதனால, DPP ஆதரவு பொதுமக்கள் குழுக்கள், TWACDA, KMT886 போன்ற அமைப்புகளோட சேர்ந்து 31 KMT எம்.பி.க்கள் மீது ரீகால் மனுக்களை தாக்கல் பண்ணாங்க. ஆனா, ஜூலை 26-ல் நடந்த வாக்கெடுப்புல எல்லா 24 இடங்களிலும் ரீகால் முயற்சி தோல்வியடைஞ்சு, KMT தன்னோட பெரும்பான்மையை தக்க வச்சிக்கிட்டு.
தைவானோட ரீகால் சட்டப்படி, ஒரு எம்.பி.யை திரும்பப் பெறணும்னா, 25% வாக்காளர்கள் ஆதரவு தரணும், “ஆமாம்” வாக்குகள் “இல்லை” வாக்குகளை விட அதிகமா இருக்கணும். இந்த முயற்சி தோல்வியடைஞ்சதால, DPP-க்கு இது பெரிய பின்னடைவு. KMT தலைவர் எரிக் சூ, இதை “தைவான் மக்கள் ஸ்திரத்தன்மையை தேர்ந்தெடுத்தாங்க”னு சொல்லி, DPP-யை “ஜனநாயகத்தை அழிக்கிற முயற்சி”னு குற்றம் சாட்டியிருக்கார். ஆனா, DPP தரப்பு, “இது ஜனநாயகத்தோட வலிமை, மக்கள் முடிவை மதிக்கிறோம்”னு சொல்லி, சீனாவோட தலையீடு இந்த தேர்தல்ல இருந்ததா குற்றம் சாட்டுது.
இந்த ரீகால் முயற்சியை சீனாவும் உன்னிப்பா கவனிச்சது. சீனாவோட தைவான் விவகார அலுவலகம், இதை “DPP-யோட அரசியல் சூழ்ச்சி”னு விமர்சிச்சு, KMT-க்கு ஆதரவு தெரிவிச்சிருக்கு. இதனால, DPP இன்னும் கடுமையா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம்னு அரசியல் வல்லுநர்கள் சொல்றாங்க. ஆகஸ்ட் 23-ல் மேலும் 7 KMT எம்.பி.க்கள் மீது ரீகால் வாக்கெடுப்பு நடக்கப் போகுது, ஆனா முதல் கட்ட தோல்வியால இதுவும் வெற்றி பெறுமானு சந்தேகம்தான்.
இந்த மோதல், தைவானோட உள்ளரசியலை பிளவுபடுத்தியிருக்கு. DPP சொல்றது, “நாங்க தைவானோட இறையாண்மையை பாதுகாக்கிறோம்”னு, KMT சொல்றது, “நாங்க சீனாவோட பேச்சுவார்த்தை மூலமா அமைதியை வைச்சிருக்கோம்”னு. இந்த பிளவு, தைவானோட ஜனநாயகத்துக்கு ஒரு சவாலா இருக்கு, அதே நேரம் மக்கள் பங்கேற்பு வலிமையையும் காட்டுது.
இதையும் படிங்க: தப்பிச்சிரலாம்னு நினைக்காதீங்க.. ஆதாரம் இருக்கு! தேர்தல் ஆணையத்தை அலற விட்ட ராகுல்காந்தி!!