×
 

அவையில எப்பிடி நடந்துக்கணும்னு தெரியாதா? எங்கிட்ட டியூசன் வாங்க.. எதிர்கட்சிகளுக்கு நட்டா டோஸ்!!

அவையில் எதிர்க்கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என என்னிடம் பயிற்சி எடுங்கள். ஏனென்றால், அடுத்த 40 வருடத்திற்கு எதிர்க்கட்சியாகத்தான் இருக்க போகிறீர்கள் என ராஜ்யசபாவில் பாஜ தேசிய தலைவர் நட்டா தெரிவித்தார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பிச்சு மூணாவது வாரமா நடந்துக்கிட்டு இருக்கு. ஆனா, பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பத்தி விவாதிக்கணும்னு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைக்குறாங்க. ஆனாலும், அரசு இந்த விவாதத்துக்கு அனுமதி கொடுக்காம, தொடர்ந்து மறுத்து வருது. இதனால, எதிர்க்கட்சி எம்பிக்கள் பாராளுமன்றத்துல அமளியில ஈடுபட்டு, மகர் துவார் முன்னாடி “எங்கள் வாக்கு, எங்கள் உரிமை, எங்கள் போராட்டம்”னு கோஷமெல்லாம் போட்டு புரொட்டெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க. 

இந்த சூழல்ல, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “பாராளுமன்ற வளாகத்துல CISF வீரர்களை குவிச்சிருக்காங்க. எதிர்க்கட்சிகள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தி போராடும்போது, இப்படி பாதுகாப்பு படைகளை நிறுத்தியிருக்குறது விசித்திரமா, அதிர்ச்சியா இருக்கு. இது பாராளுமன்றத்தோட மாண்பைக் குறைக்கிற மாதிரி இல்லையா?”னு காட்டமா கேள்வி எழுப்பினார்.

இதுக்கு பதிலடி கொடுக்குற மாதிரி, மாநிலங்களவைத் தலைவரும், பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா, எதிர்க்கட்சிகளை பங்கமா கலாய்ச்சு, “அவையில இடையூறு பண்ணுறது ஜனநாயகத்துக்கு எதிரானது. நான் பேசும்போது சிலர் என் பக்கத்துல வந்து கத்துறாங்க, கோஷமிடுறாங்க.

இதையும் படிங்க: அமளி பண்ணிக்கிட்டே இருந்தீங்கன்னா!! விவாதமே இல்லாம மசோதாவை நிறைவேத்துவோம்!! கிரண் ரிஜ்ஜூ வார்னிங்..!

இது ஜனநாயகமா? அவையை நடத்துற முறையா? நான் 40 வருஷமா எதிர்க்கட்சியா இருந்திருக்கேன். எதிர்க்கட்சி எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்கு தெரியலையா? என்கிட்ட டியூஷன் வாங்க! இன்னும் 40 வருஷத்துக்கு நீங்க எதிர்க்கட்சியாவே இருக்கப் போறீங்க, அதனால இப்பவே கத்துக்கோங்க,”னு கிண்டலோ கிண்டல் பண்ணி, அவையையே சிரிப்பால கலகலப்பாக்கிட்டார்.

இந்த பீகார் SIR விவகாரம், மழைக்கால கூட்டத்தொடரை ஆரம்பிச்சு (ஜூலை 21) இருந்து பெரிய சர்ச்சையா இருக்கு. எதிர்க்கட்சிகள், “பீகார்ல 52 லட்சத்துக்கும் மேல வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்காங்க. இது தலித், ஆதிவாசி, சிறுபான்மையினர் வாக்குரிமையை பறிக்கிற சதினு” குற்றம்சாட்டுறாங்க.

காங்கிரஸ், திரிணாமூல், ஆர்ஜேடி, சமாஜ்வாடி கட்சி மாதிரியான INDIA கூட்டணி கட்சிகள், “இது பாஜகவோட அரசியல் சதி, தேர்தல் ஆணையத்தை உபயோகிச்சு வாக்காளர் பட்டியலை மாற்றுறாங்க,”னு குற்றம்சாட்டி, மகர் துவார்ல கருப்பு பேன்ட் கட்டி, “SIR - ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல்”னு பேனர் வைச்சு புரொட்டெஸ்ட் பண்ணாங்க.

காங்கிரஸ் தலைவர் கார்கே, “தேர்தல் ஆணையம் சொல்றது, 95% வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முடிஞ்சுது. ஆனா, பீகார்ல உள்ளூர் மக்கள், BLOக்கள் சொல்றது, ஜூலை 26-ல இருந்து தான் சரிபார்ப்பு ஆரம்பமாகுது. இதுல ஏதோ மோசடி இருக்குனு” ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு போட்டு, அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேள்வி கேட்டிருக்கார்.

அதே மாதிரி, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், “65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, அதுல 6.5 லட்சம் பேர் தமிழ்நாட்டுல பதிவாகியிருக்காங்கனு தேர்தல் ஆணையம் சொல்றது நம்ப முடியாது. இது தமிழ்நாட்டு தொகுதிகளோட இயல்பை மாற்றுற முயற்சி,”னு குற்றம்சாட்டினார்

ஆனா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “SIR ஒரு அரசியல் சார்ந்த அமைப்பு எடுக்குற முடிவு இல்லை. இது தேர்தல் ஆணையத்தோட வழக்கமான செயல்பாடு. இதை விவாதிக்க முடியாது,”னு எதிர்க்கட்சிகளோட கோரிக்கையை நிராகரிச்சார். இதுக்கு ஆதரவா, மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தார், “வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஜனநாயகத்துக்கு அவசியம். ஒரு ஆவணம் கொண்டு வந்தா போதும், எல்லாத்தையும் கேக்க மாட்டோம்,”னு பதில் சொல்லியிருக்கார்

இதையும் படிங்க: அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை!! வாய்ப்பு கொட்டிக்கிடக்குது! சசிதரூர் பளீச்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share