தமிழக சட்டப்பேரவை கூட்டம்… கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்…!
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி ஆறாம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. நான்கு நாட்களுக்கு இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. கடந்த கூட்டத்தின் போது 2025-26 ஆம் ஆண்டுக்கான பொதுபட்ச தாக்கல் ஆனது. அதன் மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆறு மாத காலத்தில் சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இன்று சட்ட பேரவை கூடியது.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் இறந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் கூட்டுறவு எரிசலில் 41 பேருக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் ஆகியோருக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மறைந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், நீலகிரி எம்எல்ஏ அமுல் கந்தசாமி உள்ளிட்டவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: காசா இனப்படுகொலை... சட்டப்பேரவையில் இது நடக்கும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!
நாகலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ஆகியோருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரங்கல் தீர்மான வாசிக்கப்பட்ட நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் நாளை காலை 9:30 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இதையும் படிங்க: கேஸ் வாபஸ் வாங்கு காசு தறோம்… பேரம் பேசிய திமுக? தோலுரித்த அதிமுக…!