பொள்ளாச்சிக்கு தனி மாவட்டம்..! சட்டப்பேரவையில் MLA நித்தியானந்தன் அதிரடி கோரிக்கை..!
பொள்ளாச்சி எம் எல் ஏ நித்தியானந்தன் சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன. இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி MLA நித்தியானந்தன் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். முழுமையான கடன் தள்ளுபடி இல்லாதது விவசாயிகளுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் விற்பனை செய்வதற்கான திட்டத்தையும், சத்துணவில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் திட்டத்தையும் கொண்டுவர வேண்டும் என கூறினார். பணம் செலுத்தி காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்றும்
இதையும் படிங்க: "நீட் ரத்து"..! சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்... ஆக்ஷனில் இறங்கிய விஜய் அரசு..!
கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து, கேரளா அரசு செய்வது போல நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வராதது வருத்தம் அளிக்கிறது. அரசியல் பயணத்தில் பாதைகளும் பயணங்களும் வேறாக இருக்கலாம். 60 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட இயக்கத் தலைவர்களின் ஆலோசனை கேட்டு ஆட்சியாளர்கள் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: உதயநிதி சங்க தமிழா பேசுறாரு.? மரிய வில்சனை கிண்டலடித்த MLA..! வெளுத்துவிட்ட ராஜ்மோகன்.!!