×
 
☰

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வாளர் சொன்ன முக்கிய தகவல்!

தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்வதும் முக்கியமான அறிகுறியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழைக்கான முன்னேற்பாடுகள் தொடங்கும் நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் குறித்து தென்காசியைச் சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பல்வேறு வானிலை மாற்றங்கள் ஒருசேர நிகழ வேண்டும்.

முதலில் கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலக வேண்டும். அதன்பின்னர் மேற்குத் திசையில் வீசும் காற்றின் நிலை மாறி, தரை மட்டம் மற்றும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து காற்று தொடர்ந்து வீசும் நிலை உருவாக வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் வடகிழக்கு பருவமழை? நவம்பரில் என்ன நடக்கும்? வானிலை ஆய்வாளர் கணிப்பு!!

மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை போன்ற வானிலை அமைப்பு உருவாக வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதேபோல், தமிழக கடலோர பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்வதும் முக்கியமான அறிகுறியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சென்னை எண்ணூர் முதல் உவரி வரையிலான கடலோரப் பகுதிகளில் குறிப்பிட்ட அளவுக்கு மழைப்பொழிவு பதிவாக வேண்டும் என்றும், எண்ணூர், மாமல்லபுரம், கடலூர், வேதாரண்யம், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்வது முக்கியம் என்றும் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் அனைத்தும் ஒருசேர சாதகமாக அமைந்த பின்னரே வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். கடந்த 2025-ம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ம் தேதி தொடங்கியதாக ஐ.எம்.டி. அறிவித்திருந்தது.

தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் வடகிழக்கு பருவமழைக்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே, இந்த ஆண்டு பருவமழை எப்போது தொடங்கும், அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் முதல் பொதுமக்கள் வரை அதிகரித்துள்ளது.
 

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை எதிரொலி! அலர்ட் மோடில் முதல்வர் விஜய்! இன்று 2-வது நாளாக ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share