22 குழந்தைகளின் உயிரை பறித்த எமன்! Coldrif இருமல் மருந்துக்கு டெல்லியில் தடை!
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு தடை விதித்தித்தன. இந்நிலையில் இந்த வரிசையில் டெல்லி அரசும் கோல்ட்ரிஃப் மருந்துக்க்கு தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் உட்பட மூன்று மருந்துகளில் நச்சு வேதியல் 'டை-எத்திலீன் கிளைக்கால்' (DEG) 48.6% அளவில் கலந்திருந்ததாக ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 22 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
கோல்ட்ரிஃப், ரீலைப் (Relife) மற்றும் ரெஸ்பிஃப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய இருமல் சிரப்புகளில் DEG-ன் அதிக அளவு கண்டறியப்பட்டது. இந்த நச்சு வேதியல், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட உயிர்க்குறிய நோய்களை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: உஷார் மக்களே!! பிஞ்சுகளின் உயிரை குடித்த இருமல் மருந்து! 6 குழந்தைகள் பரிதாப பலி!
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 9 குழந்தைகள், ராஜஸ்தானின் சிகாரில் 2 குழந்தைகள் உள்ளிட்டோர் இந்த மருந்துகளை உட்கொண்டு உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இம்மருந்துகளுக்கு தடை விதித்தன.
இந்நிலையில், டெல்லி அரசும் கோல்ட்ரிஃப் சிரப்பின் விற்பனை, கொள்முதல் மற்றும் விநியோகத்தை தடை செய்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காக, விற்பனையாளர்கள் உடனடியாக இம்மருந்துகளை திரும்பப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன், சென்னையில் மத்திய பிரதேச போலீஸால் கைது செய்யப்பட்டார். அவர் 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் மருந்தை பரிந்துரைத்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகம், 6 மாநிலங்களில் (ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா) மருந்து தொழிற்சாலைகளில் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறைகளில் குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. மருந்து உற்பத்தி, சோதனை, விநியோகத்தில் தரக் கண்காணிப்பு பலவீனமாக உள்ளதாகவும், இதனால் உலக அளவில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் WHO எச்சரித்துள்ளது.
இந்தியாவின் மருந்து தொழில் உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இருந்தாலும், சோதனைகளில் தோல்விகள், லாப் ஹோல்கள், லாபி ஆகியவை பொது சுகாதாரத்தை அச்சுறுத்துவதாக அறிக்கை கூறுகிறது. இதேபோல், 2023-ல் காம்பியா, உஸ்பெகிஸ்தானில் இந்திய உற்பத்தி இருமல் சிரப்புகள் காரணமாக 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்தியா, GMP (Good Manufacturing Practices) விதிகளை 2025 வரை அமல்படுத்த வேண்டும் என்று WHO வலியுறுத்தியது.
தமிழகத்தில், இரு மருந்து ஆய்வாளர்கள் சோதனை செய்யத் தவறியதாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், தமிழ்நாட்டு அதிகாரிகளை குற்றம் சாட்டி, "22 குழந்தைகள் உயிரிழந்தனர்" என்று கூறினார். இந்தச் சம்பவம், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சகம், குழந்தைகளுக்கு இருமல் சிரப்புகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்ஸ்டா காதலியுடன் 4 நாட்கள் டூர்! மனைவியின் கள்ளக்காதலால் கொலையாளியான கணவன்!