அடிதூள்..!! கல்வி தகுதி 8ம் வகுப்பு... சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்...!
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு மொத்தம் ஒன்பது பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணயத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுணர் ஒன்பது இடங்களுக்கு 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் படையெடுத்துள்ளனர். கல்வி தகுதி எட்டு வகுப்பு மட்டுமே தேவை என்று அறிவிக்கப்பட்டாலும, இன்ஜினியரிங் இரு டிகிரி முடித்தவர்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்து பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் ஆணயத்தில ஆணைய பணிக்கான ஒன்பது இடங்களுக்கு ஏற்கனவே அதிகாரப்பூர்வமான விளம்பரம் என்பது கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் ஆகிய பணிகளுக்கு ஒன்பது காலிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு எட்டாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தால் போதும் என்பது அதற்கான கல்வி தகுதியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காலை முதல் பெண்கள் ஆண்கள் என 500க்கும் மேற்பட்டோர் குறிப்பாக இன்ஜினியரிங், டபுள் கிராஜுவேட் என உயர்படிப்பு படித்தவர்கள் இந்த வேலைக்காக வரிசையில் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு மொத்தம் ஒன்பது பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி? திமுகவுடன் பேச்சுவார்த்தையா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..!
இதற்கான நேரடி நியமன அடிப்படையில் தான் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இரண்டாம் தேதி அதாவது ஜனவரி இரண்டாம் தேதிக்குள்ள விண்ணப்பியத்துக்குள்ள அறிவிப்பு என்பது விடுக்கப்பட்டிருந்தது. மொத்தமாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் தகுதியாக இருக்கிறது.
இந்த வேலைக்கான சம்பளம் 15,700 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேலைக்கு கிட்டத்தட்ட டபுள் கிராஜுவேட் முடித்தவர்கள், இன்ஜினியரிங் முடித்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் ஆணய வளாகத்தில இந்த நியமனத்திற்காக தற்போது காத்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாகிய ஒரு சம்பவமாக பார்த்தப்படுகிறது.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் தேர்வில் களமிறங்கும் ஆர்.எஸ்.எஸ்!! MLA சீட் யார் யாருக்கு? பதற்றத்தில் முக்கிய தலைகள்!