×
 

அரசு பள்ளிகளில் RSS சாஹா பயிற்சியா? என்ன நடந்தது..? தமிழக அரசு விளக்கம்..!!

அரசு பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெற்றதா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

RSS சாஹா பயிற்சி என்பது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) நடத்தும் கூட்டு அல்லது இணைந்த பயிற்சி அமர்வுகளைக் குறிக்கும். இது RSS-இன் அடிப்படை அமைப்பான ஷாகாக்களுடன் தொடர்புடையது மற்றும் புதிய உறுப்பினர்கள் அல்லது இளைஞர்களுக்கு அளிக்கப்படும் ஆரம்பநிலை அல்லது குழு பயிற்சியாகும். இது தனிப்பட்ட பயிற்சிக்கு அப்பாற்பட்டு, பலரும் ஒன்றாக இணைந்து பங்கேற்கும் வகையில் நடைபெறும்.

RSS-இன் முக்கிய நோக்கம் இந்திய சமூகத்தை ஒன்றிணைத்து, தேசிய உணர்வு, ஒழுக்கம், உடல் தகுதி, தலைமைத்துவம் மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதாக கூறுகின்றனர். சாஹா பயிற்சி இந்த இலக்கை நோக்கிய முதல் படியாக செயல்படுகிறது. இது பள்ளிகள், கிராமங்கள் அல்லது உள்ளூர் இடங்களில் சில நாட்கள் அல்லது வாரங்கள் நடைபெறும் குறுகிய கால பயிற்சியாக இருக்கும். அரசு பள்ளிகளில் நடைபெறும் சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் சிலர் இதை அரசு இடங்களில் அனுமதியின்றி நடத்தப்படுவதாகக் கருதுகின்றனர்.

இந்த நிலையில் அரசுப் பள்ளியில் RSS சாஹா பயிற்சி என பரவும் தகவல் தவறானது என தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. கோவை பீளமேடு காந்திமாநகரில் உள்ள அரசுப் பள்ளியில் RSS சாஹா பயிற்சி அளிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடக அமைச்சர் அடாவடி... தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது..! சர்ச்சை..!!

இது முற்றிலும் தவறான தகவல் என்றும் இது தொடர்பாக கோயம்புத்தூர் முதன்மைக் கல்வி அலுவலர் அளித்துள்ள விளக்கத்தில், "RSS சாஹா பயிற்சி நடைபெற்ற இடம் காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் இடம் அல்ல என்றும் அரசுப் பள்ளி மைதானத்தில் RSS சாஹா பயிற்சி எதுவும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நான் முதல்வன் உதவித் தொகை நிறுத்தம்.? மாணவர்கள் அதிர்ச்சி..! தமிழக அரசு விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share