×
 

NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!

வரும் மே இரண்டாம் தேதி முதல் உத்தரவு வரும் வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்குகள் எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாகப் போட்டியிட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மே 4 அன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அதன் முடிவுகள் படிப்படியாக வெளியாகும். இந்த முடிவுகள் தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் சூழலை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் அசாதாரண சூழல் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கத்துடனும் முக்கியமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பாக காவலர்களுக்கு தமிழக டிஜிபி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். வரும் 2ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை எடுக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "வெற்றி, தோல்வி சகஜம்"..! இணையதள பதிவுகள் அதிர்ச்சியை கொடுக்குது..! ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து..!

தற்போது விடுப்பில் உள்ளவர்களும் 2ம் தேதி முதல் விடுப்பை நீட்டிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மகப்பேறு விடுப்பு, மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்றும் விளக்கம் அளித்துள்ளார். மே 4ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

இதையும் படிங்க: தமிழகம் இதுவரை காணாத விசில் புரட்சி நடக்கும்..! செங்கோட்டையன் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share