6 மாசத்துல 30,000 பேர்.. 2026-லயும் பணிநீக்கம் தொடரும்! TCS கொடுத்த ஷாக் அப்டேட்!
இந்தியாவின் மிகப்பெரிய IT நிறுவனமான TCS, தனது பணியாளர் எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்து வருவது தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் (TCS), கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 30,000 ஊழியர்களைப் பணியிலிருந்து விடுவித்துள்ளது ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் ஐடி துறையில் ஆட்குறைப்புப் படலம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள காலாண்டு நிதி நிலை முடிவுகளில், தனது பணியாளர் எண்ணிக்கை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களுக்குத் தங்களை மாற்றிக்கொள்ளாத ஊழியர்கள் மீதான இந்த ‘வேலைநீக்க வேட்டை’ இன்னும் 6 மாதங்களுக்குத் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
டிசிஎஸ் நிறுவனம் தன்னை முழுமையாக ஒரு 'AI-First' நிறுவனமாக உருமாற்றும் அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே 2.17 லட்சம் ஊழியர்களுக்கு ஏஐ பயிற்சியை வழங்கியுள்ள நிலையில், போதிய திறன் இல்லாத 30,000 பழைய ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. இது குறித்துப் பேசிய நிறுவனத்தின் மனிதவள அதிகாரி சுதீப் குன்னுமால், "எங்களுக்கு ஆட்கள் தேவையில்லை என்பதற்காக இந்த நீக்கம் செய்யப்படவில்லை; பழைய திறன்களை மட்டுமே கட்டிக்கொண்டு அழுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த மறுசீரமைப்பில் அதிகச் சம்பளம் வாங்கும் நடுத்தர மற்றும் மூத்த நிலை அதிகாரிகளே அதிகளவில் குறிவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, நவீனத் தொழில்நுட்பங்களை வேகமாக உள்வாங்கிக் கொள்ளும் புது வேலையாட்களை (Freshers) இருமடங்கு எண்ணிக்கையில் பணியமர்த்த டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: சுற்றுலாவில் நம்பர் 1 தமிழகம் தான்! 33 கோடி சுற்றுலா பயணிகள் வருகை; அமைச்சர் ராஜேந்திரன் பெருமிதம்!
இந்த அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை ஐடி ஊழியர்களிடையே ‘பாதுகாப்பற்ற’ சூழலை உருவாக்கியுள்ளது. லாபகரமாக இயங்கும் ஒரு நிறுவனமே இப்படி ஊழியர்களைத் தூக்கியெறிவது நியாயமற்றது எனக் கண்டனம் தெரிவித்துள்ள ஐடி தொழிற்சங்கங்கள், வரும் பிப்ரவரி மாதம் இதற்கு எதிராகப் போராடப் போவதாக அறிவித்துள்ளன. “ஏஐ சுனாமி” ஐடி துறையின் பழைய கட்டமைப்பைச் சிதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், வேலையைத் தக்கவைத்துக் கொள்ள ஊழியர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "T20 World Cup-ல் ட்விஸ்ட்!" வேற ஊர்ல வைங்க! - இந்தியா வராமல் அடம் பிடிக்கும் வங்கதேசம்.. ஷாக் ஆன ICC!