×
 

தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு..!

தெலங்கானா மாநிலத்தில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் பலி எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. மருந்து பொருட்களுக்கு தேவையான ரசாயனங்கள் தயாரிக்கப்படும் இந்த தொழிற்சாலையில் நேற்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்.   

இந்நிலையில், இந்த ரசாயன தொழிற்சாலையில் நேற்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில், தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் 100 மீட்டருக்கும் அப்பால் தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதையும் படிங்க: தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடித்து சிதறிய பாய்லர்.. பறிபோன 10 பேரின் உயிர்..!

தொடர்ந்து இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயைணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 11 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஒருவழியாக தீயை அணைத்தனர். 

மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் போலீசார் திவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சங்கரெட்டி மாவட்ட ஆட்சியர் பி. பிரவீண்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பரிதோஷ் பங்கஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை மேற்பார்வையிட்டனர்.  

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, உயர்மட்டக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் நேற்று 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 35 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலருக்கு சுவாசப் பிரச்சனைகள் உள்ளதாக தெலங்கானா சுகாதார அமைச்சர் தாமோதர ராஜா நரசிம்ஹா தெரிவித்தார். தற்போது வரை 57க்கும் மேற்பட்டோர் உடல்நிலை தேறி வீடு திரும்பியதாக சங்கரெட்டி மாவட்ட ஆட்சியர் பி. பிரவீண்யா தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: தெலங்கானா: ரசாயன தொழிற்சாலையில் வெடித்து சிதறிய பாய்லர்.. பறிபோன 10 பேரின் உயிர்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share