ஸ்ரீசைலத்தில் பயங்கரம்... விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை... பகீர் பின்னணி...!
நந்தியாலா மாவட்டம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஒரு தனியார் அன்னதானா விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தூக்கிட்டு தற்கொலை
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் ( 36). ஆட்டோ டிரைவரான இவருக்கு ஆதிலட்சுமி (50), மல்லேஸ்வரி (45) இரண்டு மூத்த சகோதரியும் ஸ்ரீதேவி (33) என்று இளைய சகோதரிகள் உள்ளனர். இவர்களில் 2 மூத்த சகோதரிகளுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் இதில் ஒருவருக்கு மணிகண்டா (15) மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கணவர்களை பிரிந்த சகோதரிகளும் சுதாகருடன் வசித்து வந்தனர்.
அதன்படி சுதாகர் அவரது 3 சகோதரிகள் மற்றும் சகோதரியின் மகன் மணிகண்டா என 5 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஆட்டோ டிரைவரான சுதாகருக்கும் அவரது சகோதரிகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதோடு குடும்பத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வந்தனர். இதனால் விரக்தியடைந்த சுதாகர் தனது சகோதரிகள் மற்றும் சகோதரியின் மகள் என 5 பேரும் ஆட்டோவில் கடந்த 20ம் தேதி அன்று நந்தியால் மாவட்டம் ஸ்ரீசைலம் நகருக்கு வந்தனர். அங்கு ஒரு அன்னதான சத்திரத்தில் அறை எடுத்து 5 பேரும் தங்கினர்.
பின்னர், அந்த அறையிலேயே 5 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். அறை எடுத்த பின்னர் அதில் இருந்து யாரும் எதற்காகவும் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் 5 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: தனியார் கல்லூரி விடுதியில் பயங்கரம்... பூட்டிய அறையிலிருந்து வந்த துர்நாற்றம்... உள்ளே மாணவி கிடந்த பகீர் நிலை...!
போலீசார், 5 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரள மாணவி தற்கொலையில் அதிரடி ட்விஸ்ட்.... தலைமறைவாக இருந்த முக்கிய நபரை தட்டித்தூக்கிய போலீஸ்...!