×
 

ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு.. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றது அம்பலம்!

இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக 'ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.



இத்தாக்குதலில் பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள முரிட்கேயில்  ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது. இதேபோல ஜெய்ஸ் இ அகமது அமைப்பின் நிறுவனர் மசூத் ஆசாத்தின் குடும்பத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன.



இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இத்தகவலை பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக்கின் செய்தி தொடர் பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்தார்.
இறுதிச் சடங்குகளுக்கு பிறகு பயங்கரவாதிகளின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: பாகிஸ்தானை கதறவிட்ட ஆபரேசன் சிந்தூர்.. இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்.. மத்திய அரசு அதிரடி!

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசும் ராணுவமும் எல்லா உதவிகளையும் செய்து வருவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில்  பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதன் மூலம் பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ள தொடர்பை அவர்களே உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: புதிதாக வருபவர்கள் முதல்வராக முடியாதா.? உதயநிதி மட்டும் முதல்வராக முடியுமா.? தமிழிசை பொளேர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share