2 நாட்களாக உளவு.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தாக்குதல்.. தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்..!
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் சிம் இல்லாத நவீன மொபைல் போனை பயன்படுத்தி திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், இரு நாட்களுக்கு முன்பே பைசரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வந்து உளவுபார்த்து சென்றுள்ளனர், சிம் இல்லாத நவீன மொபைல் போனை தங்களுக்குள் தொடர்பு கொள்ள பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
பஹல்காமில் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22ம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் தயாராகி வருகிறது, என்ஐஏவும் வழக்குப்பதிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இதுக்கும் தடையா..? அடி மேல் அடி கொடுக்கும் இந்தியா.. திணறும் பாகிஸ்தான்..!
இந்நிலையில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா டுடே தளம் வெளியிட்ட செய்தியில் “தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 15ம் தேதியே பஹல்காம் பகுதிக்கு வந்து உளவு பார்த்து எங்கு தாக்குதல் நடத்தலாம் என்று அடையாளம் பார்த்துள்ளனர்.
இதில் ஒரு தீவிரவாத கும்பல் பஹல்காமில் உள்ள தீம் பார்க் ஒன்றில் பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்ததால் அந்தத் திட்டத்தை கைவிட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் தங்களுக்கும் தகவல்களை பரிமாறிக்கொள்ள அல்ட்ரா ஸ்டேட் கம்யூனிகேஷன் சிஸ்டம் முறையை பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் தீவிரவாதிகள் சிம் கார்டு இன்றி மொபைல் பேச முடியும் எனத் தெரிவித்துள்ளது.
என்டிடிவி வெளியிட்ட செய்தியில் “தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் முன்பே, பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வந்து உளவு பார்த்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அரு பள்ளதாக்கு, உள்ளூர் பூங்கா, பேதாக் பள்ளாத்தாக்கு ஆகியவற்றில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகள், தீவிரவாதிகளுக்கு உதவியது உள்ளிட்ட 20 பேர் ஈடுபட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் 48 சுற்றுலாத் தளங்கள் மூடல்..!