Operation Trashi.! 2 பயங்கரவாதிகள் நாக்அவுட்.. இதோடு 8 விக்கெட் காலி.. வேட்டையாடும் இந்திய ராணுவம்..!
ராணுவம், பாரா மிலிட்டரியின் சிறப்பு படை, அசாம் ரிபிள்ஸ் படை வீரர்கள் சத்ரூ ஏரியாவை சுற்றி வளைத்தனர்.அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.
ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது. உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் கடந்த சனிக்கிழமை உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: பாக்., தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. காஷ்மீர் கவர்னர் சொன்ன குட்நியூஸ்..!
தற்போது சண்டை நிறுத்தம் காரணமாக எல்லையில் அமைதி திரும்பியுள்ளது. ஆனாலும், இந்த சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே. பாகிஸ்தானின் செயல்பாடுகளைப் பொருத்தே அதன் எதிா்காலம் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். எனவே எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், போருக்கு பிறகு காஷ்மீரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. தினமும் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடக்கிறது. இன்று பாரமுல்லா மாவட்டம் ஷிங்போராவின் சத்ரூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ராணுவம், பாரா மிலிட்டரியின் சிறப்பு படை, அசாம் ரிபிள்ஸ் படை வீரர்கள் சத்ரூ ஏரியாவை சுற்றி வளைத்தனர்.
அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகளை நம் வீரர்கள் சுட்டுப்பொசுக்கினர். அவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் பணி இப்போது நடக்கிறது. வேறு யாரும் அந்த பகுதியில் இன்னும் பதுங்கி இருக்கிறார்களா என்று பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். operation Trashi என்ற பெயரில் இந்த என்கவுன்டர் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் தொடர்ந்து என்கவுன்டர் நடக்கிறது. இதுவரை ஜெயஸ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் அப்டேட்.. பாக்.-ஐ தோலுரிக்கும் பயணம்.. உலக நாடுகளுக்கு புறப்பட்ட கனிமொழி..!