இந்தியாவில் கால் பதித்தது டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரும்!! ட்ரம்ப் வார்னிங்கை மீறுவாரா எலான்?
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் திறந்துள்ளது. மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஷோரூமை திறந்து வைத்தார்.
மும்பையில், பந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) உள்ள மேக்கர் மாக்ஸிட்டி மாலில், ஜூலை 15, 2025 அன்று டெஸ்லாவின் முதல் இந்திய ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்’ திறக்கப்பட்டது, இது இந்திய மின்சார வாகன (EV) சந்தையில் ஒரு மைல்கல் ஆகும். இந்த நிகழ்வை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார்.
டெஸ்லாவின் இந்திய வருகை, உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை துரிதப்படுத்தும். மாடல் Y, ரூ.60 லட்சத்தில் தொடங்கி, பிரீமியம் மின்சார வாகனப் பிரிவை மறுவரையறை செய்யும். மகாராஷ்டிராவில் நான்கு பெரிய சார்ஜிங் நிலையங்கள் மற்றும் 32 சிறிய நிலையங்களை அமைக்கும் திட்டம், நாடு முழுவதும் மின்சார வாகன உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.
இந்தியாவின் புதிய மின்சார வாகனக் கொள்கை, குறைந்த இறக்குமதி வரி மற்றும் ஊக்கத்தொகைகளுடன், டெஸ்லாவின் நுழைவை எளிதாக்கியுள்ளது. இது உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மின்சார வாகனத் துறையில் புதுமைகளை ஊக்குவிக்கும் என அறியப்படுகிறது.
இதையும் படிங்க: ட்ரம்புக்கு ஆப்பு உறுதி! முற்றும் மோதல்.. தனிக்கட்சி துவக்கினார் எலான் மஸ்க்..
இந்த நிலையில் துவக்க விழாவில் பேசிய பட்னாவிஸ், “டெஸ்லா மும்பையில், சரியான நகரத்திலும் மாநிலத்திலும் வந்துள்ளது” என்று கூறினார். அவர் டெஸ்லாவை ஒரு வாகன நிறுவனத்திற்கு அப்பாற்பட்டு, புதுமை, நிலைத்தன்மை மற்றும் வடிவமைப்பின் அடையாளமாகப் பாராட்டினார்.
“மகாராஷ்டிராவில் மின்சார இயக்கத்திற்கு வலுவான சந்தை உள்ளது, மேலும் டெஸ்லாவின் வருகை முழு சந்தையையும் மாற்றும்,” என்று அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் மின்சார வாகனக் கொள்கைகள், சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி ஊக்குவிப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, டெஸ்லாவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தார். மேலும், டெஸ்லா எதிர்காலத்தில் மகாராஷ்டிராவில் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்தியாவின் உயர் இறக்குமதி வரிகளைத் தவிர்க்க ஆலை அமைப்பது அமெரிக்காவிற்கு “நியாயமற்றது” என்று அவர் கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்யாமல், டெஸ்லா தற்போது சீனா மற்றும் அமெரிக்காவில் இருந்து $1 மில்லியன் மதிப்பிலான வாகனங்கள் மற்றும் உபகரணங்களை இறக்குமதி செய்கிறது.
இந்த எதிர்ப்பு இருந்தபோதிலும், டெஸ்லாவின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளார், ஆனால் தற்போது விற்பனை மற்றும் சேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருகிறார்.
டெஸ்லாவின் மும்பை ஷோரூம் திறப்பு, இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. பட்னாவிஸின் ஆதரவு மற்றும் மாநிலத்தின் முன்னேறிய கொள்கைகள், டெஸ்லாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ட்ரம்பின் எதிர்ப்பு இருந்தாலும், டெஸ்லாவின் இந்திய வருகை, நிலைத்தன்மை மற்றும் புதுமையை மேம்படுத்தி, இந்திய மின்சார வாகன சந்தையை மாற்றும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்.. எலான் மஸ்க் சிறந்த மனிதர்; புகழ்ந்து தள்ளும் ட்ரம்ப்..!