மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!
மகாராஷ்டிராவில் நடக்க இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 28 ஆம் தேதியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (Maharashtra Teacher Eligibility Test - TET) திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தத் தேர்வு ஆசிரியர் பணிக்கான முக்கியமான நுழைவுத் தேர்வாகும். ஏராளமான வேலைவாய்ப்பை எதிர்பார்த்து தயாராகி வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் ஆசிரியர் வேட்பாளர்களின் எதிர்காலம் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில், குறிப்பாக மாநில அளவிலான தேர்வுகள் மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்வுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் முன்பு புகாருக்கு உள்ளாகியுள்ளன. WhatsApp, Telegram போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வினாத்தாள்கள் அல்லது "கெஸ் பேப்பர்கள்" பரப்பப்படுவது பொதுவான முறையாக மாறிவிட்டது. இந்த முறை TET தேர்வில் இத்தகைய கசிவு சந்தேகம் எழுந்ததால், மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து தேர்வை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு RELIEF..!! டெட் தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு... சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு..!!
வினாத்தாள் கசிவு என்பது தனிப்பட்ட ஒரு சம்பவம் அல்ல; இது முழு கல்வி அமைப்பையே பாதிக்கும் பெரிய பிரச்சனை. மாணவர்களின் உழைப்பை பாதுகாக்கவும், தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் அரசு மற்றும் தேர்வு அமைப்புகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பாக்கியராஜை கலை வாரிசாக அறிவித்த MGR..! சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நெகிழ்ச்சி..!