×
 
☰

#BREAKING: தாய் மாமனாக மாறிய முதல்வர் விஜய்..! மதுரையில் மாஸ் ஆரம்பம்..! குழந்தைகளுக்கு தங்க மோதிரம் போட்ட CM..!!

மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழக வெற்றிக்கழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இந்தத் திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கும் வகையில் வடிவமைத்துள்ளது.

 இது தமிழ் பண்பாட்டில் உள்ள தாய்மாமன் சீர் வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. குடும்பத்தில் தாய்மாமன் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பரிசு அளிப்பது போல அரசே அந்தப் பாத்திரத்தை ஏற்று ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் எடையுள்ள 22 காரட் தங்க மோதிரத்தை வழங்குகிறது. இத்திட்டம் முதலமைச்சரின் பிறந்த நாளான ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொருந்தும். 

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களின் குழந்தைகளே இதில் பயனடையத் தகுதியுடையவர்கள். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் கண்காணிப்பு முறையில் பதிவு செய்து இனப்பெருக்க மற்றும் குழந்தை நல அடையாள எண் பெற்றிருக்க வேண்டும். ஆண்டுதோறும் சுமார் நான்கு லட்சத்து இருபதாயிரம் பிரசவங்கள் அரசு நிறுவனங்களில் நடைபெறுவதால் இந்தத் திட்டத்திற்கு ஏறக்குறைய எழுநூற்று ஐம்பத்தைந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளன. 

இதையும் படிங்க: மதுரையில் முதல்வர்.. வழிநெடுகிலும் பூமழை... CM விஜய்க்கு உற்சாக வரவேற்பு..!!

ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் பொறிக்கப்பட்டு பாதுகாப்பான பேக்கேஜிங் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் சென்னையிலிருந்து தனி விமானத்தில் மதுரைக்கு வந்து விமான நிலையத்திலிருந்து மருத்துவமனைக்குச் சென்றார். மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி அவரை வரவேற்றனர். தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் விளக்கம் கொடுத்தார். இதையடுத்து விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு தாய் மாமனாக தங்க மோதிரம் அணிவித்து சிறப்பித்தார். தொடர்ந்து மேடையில் இருந்து கீழே இறங்கி பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.

இதையும் படிங்க: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்... யாரெல்லாம் இத்திட்டத்தில் பலன் பெறலாம்?... வெளியானது முக்கிய நிபந்தனை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share