தென்காசி, நெல்லை அரிவாள் வெட்டு சம்பவத்தில் அடுத்த அதிரடி... இரவோடு, இரவாக போலீஸ் செய்த தரமான சம்பவம்...!
நேற்று 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் முகமூடி அணிந்த கும்பல் சாலைகளில் நின்றவர்களை சரமாரியாக வெட்டிய விவகாரத்தில் நேற்று 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் சர்ச் தெருவிற்குள் இன்று மாலை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் புகுந்து சாலையோரங்களின் நின்று கொண்டிருந்த 6 இளைஞர்களை கார்த்தி உள்ளிட்ட பல்வேறு பயங்கர ஆயுதங்களுடன் வெட்டினர். மேலும் வெறி அடங்காத முகமூடி அணிந்த மர்ம கும்ப கும்பல் அங்கிருந்து நெல்லை மாவட்டம் மானூர் தெற்குப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களில் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமான் இருவரும் ஏன் வேகமாக செல்கிறீர்கள் என முகமூடி அணிந்தவர்களிடம் கேட்டுள்ளனர். உடனே ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் கேள்வி கேட்ட மானூர் தெற்குப்பட்டியைச் சேர்ந்த முபாரக் மற்றும் அப்துல் ரகுமானை சரமாரியாக அரிவாளை மாற்றி பிடித்து வெட்டினர்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் இடைத்தேர்தல் பரபரப்பு..!! முழுவீச்சில் தவெக, திமுக..!! பரிதாப நிலையில் அதிமுக..!!
காயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாவட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் நடைபெற்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை முதல் கட்டமாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இன்று மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்கள். மேலும் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெற்குப்பட்டி பகுதியில் நடைபெற்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை பதற்றம் அடைய செய்திருக்கிறது.
இதுதொடர்பாகவும் மாவட்டத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: விடிந்ததுமே அதிரடி...!! - மகளிருக்கு மாதம் ரூ.2,500 - நிதி அமைச்சர் மரிய வில்சன் கொடுத்த முக்கிய அப்டேட்...!