கோடையில் மிரட்டும் கனமழை... தென்பண்ணையில் வெள்ளப்பெருக்கு! மக்களே உஷார்!
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல் தென்னிந்திய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வரும் 21-ஆம் தேதி நெருக்கத்தில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும் 22-ஆம் தேதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் எனக்கும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் கனமழை எதிரொலி! ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு...
தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாமென அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு... நெல்லையில் உள்ளம் குளிர்ந்த உதய்..!