கூட்டணிக்குள் குழப்பம்..! வேட்புமனுவை திரும்பப் பெறாத காங்கிரஸ்... திருமா. கடும் கண்டனம்..!!
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி வேட்பு மனுவை திரும்ப பெறாத நிலையில் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதி அறிவித்தது. தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். வேட்புமனு தாக்கல் தொடங்கிய தேதி மார்ச் 16, கடைசி தேதி மார்ச் 23, வேட்புமனு ஆய்வு மார்ச் 24, வேட்புமனு வாபஸ் இழுப்பதற்கான கடைசி நாள் மார்ச் 26. வாக்குப்பதிவு ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்து இருந்தார். ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர் கரை ஆகிய மூன்று தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று வேட்பாளர் பட்டியலையும் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரசும் வேட்பு மனு தாக்கல் செய்தது என்று ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார். கட்சி நிர்வாகிகள் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமல் ஹாசன் செய்த தியாகம்... திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக திருமா சொன்ன வார்த்தை...!
கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியில் காங்கிரஸ் கட்சி, வேட்பாளரை அறிவித்திருப்பதாக கூறியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸின் அணுகுமுறை கூட்டணியின் வெற்றி வாய்ப்பை கேள்விக் குறியாக்குவதாக தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்ப பெறாததால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பானை சின்னத்தில் தான் போட்டி..! 8 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்? திருமா. பளீச் விளக்கம்..!!